மயக்கம் வந்தால் என்ன செய்ய வேண்டும்
மனிதர்களுக்கு திடீரென்று ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று மயக்கம். இந்த மயக்கம் எப்போ வரும் என்று சொல்ல முடியாது. அதனால் மயக்கம் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இது போல முதலுதவியை தெரிந்து கொள்வதால் ஒரு உயிரை காப்பாற்றலாம். நம் பதிவில் நிறைய வகையான முதலுதவிகளை பதிவிட்டு வருகிறோம். அதை பற்றி தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
காதினுள் உயிருள்ள பூச்சி சென்று விட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?
மயக்கம் வந்தால் முதலுதவி என்ன செய்ய வேண்டும்:
மயக்கம் வந்தவரை காற்றோட்டமான இடத்திற்கு தூக்கி செல்ல வேண்டும். பின்பு அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள் இறுக்கமாக இருந்தால் கொஞ்சம் தளர்வாக செய்ய வேண்டும். சட்டை பட்டன் எல்லாம் கழட்டி விட்டு விடலாம்.
மேலும் மயக்கம் வந்த வரை உட்கார வைக்க வேண்டும், அல்லது படுக்க வைக்க வேண்டும். தலை கீழ் பக்கமும், பாதங்கள் மேல்நோக்கியும் இருக்குமாறு வைக்க வேண்டும். சில நேரங்கள் பாதங்களை உயரமாக பிடித்து கொள்ள வேண்டும்.
முகத்தில் பளிச்சென்று தண்ணீரை தெளிக்க வேண்டும். இப்படி செய்வதனால் மூளையில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு மூளை நரம்புகள் வேலை செய்து மயக்கம் தெளிந்து விடும்.மயக்கம் தெளிந்த பிறகு குளுக்கோஸ் தண்ணீரில் சிறிதளவு உப்பு கலந்து மயக்கம் வந்தவருக்கு குடிக்க தரலாம்.
மயக்கம் வருவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
மேல் கூறப்பட்டுள்ள உதவிகள் எல்லாம் செய்தும் ஐந்து நிமிடத்தில் மயக்கம் தெளியவில்லை என்றால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.
மயக்கம் வந்தால் செய்ய கூடாதவை:
மயக்கம் வந்தவருக்கு படுக்க வைக்கும் போது தலைக்கு தலையணை வைக்க கூடாது. இதற்கு பதிலாக காலுக்கு தலையணை வைக்கலாம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | First Aid in Tamil |