First Aid for Nose Bleeding at Home in Tamil
பொதுவாக நமது உடல் உறுப்பில் ஏதேனும் ஒரு பகுதியில் காயம் அடைந்தாலோ அல்லது வலி ஏற்பட்டாலோ நம் ஆரோக்கியமாக இருக்க முடியாது. ஏனென்றால் இதுபோன்ற பிரச்சனைகள் நம்மையும், நமது உடலையும் எப்போதும் சுறு சுறுப்பாக வைக்க இயலாது. இத்தகைய பிரச்சனை சாதாரணமாக இருக்கும் பட்சத்தில் நமக்கு அந்த அளவிற்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. ஆனால் சில நேரத்தில் கால், கை, மண்டை மற்றும் மூக்கு என இதுபோன்ற பகுதிகளில் இருந்து இரத்தம் வரக்கூடிய பிரச்சனை ஏற்படும். இவ்வாறு உடல்நலக்குறைவு ஏற்படும் போது முதலில் என்ன செய்வது என்ற குழப்பம் இருக்கும். அப்படி பார்த்தால் ஒவ்வொரு பிரச்சனைக்கு என்று முதலுதவி உள்ளது. அவற்றை செய்வதன் மூலம் உடனடி வலியில் இருந்து விடுபடலாம். அதனால் இன்று மூக்கில் இருந்து இரத்தம் கசிவதை நிறுத்துவதற்கு வீட்டிலேயே செய்ய வேண்டிய முதலுதவி என்ன என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
மூக்கில் ரத்தம் வந்தால் என்ன செய்வது:
பொதுவாக மூக்கில் இருந்து இரத்தம் வந்தால் அதனை அழுத்தி துடைக்காமல் பொறுமையாக துடைக்க வேண்டும். மேலும் யாருக்கு மூக்கில் இருந்து இரத்தம் வந்தாலும் முதலில் அவர்களை அமர செய்யுங்கள்.
மூக்கில் இருந்து இரத்தம் வரும் போது அதற்கு அதிகமாக அழுத்தம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அழுத்தம் கொடுக்கும் போதும் இரத்தம் அதிகமாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
அதன் பிறகு ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் வைத்து மூக்கின் மேல் பகுதியில் வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும். மேலும் மூக்கில் இருந்து வரும் இரத்தத்தை ஒருபோதும் வாய் வழியாக குடிக்கக்கூடாது.
இவற்றை எல்லாம் செய்தாலும் கூட வெங்காயத்தை வைத்து ஒரு வீட்டு வைத்தியத்தை செய்யலாம். அதாவது வெங்காயத்தை இரண்டு பாதியாக நறுக்கி கொள்ளுங்கள்.
பின்பு அதில் உள்ள ஒரு பாதியை மூக்கின் அடிப்பகுதியில் வைத்து நுகருங்கள். இப்படி செய்வதன் மூலம் வெங்காயத்தில் உள்ள விட்டமின் C மற்றும் பயோ ப்ளோவனாய்டுகள் ஆகிய பொருட்களால் இரத்தம் வருவது நின்று விடும்.
கொத்தமல்லி எண்ணெய்யை 2 அல்லது 3 சொட்டு எடுத்து உங்களது மூக்கில் தடவிக் கொள்ளுங்கள். இது உங்க மூக்கில் இருந்து இரத்தம் வடிவதை தடுக்கிறது.
எனவே மூக்கில் இருந்து இரத்தம் கசிவு ஏற்படும் போது இத்தகைய முதலுதவி செய்தாலும் கூட உடனே தாமதம் செய்யாமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
தீக்காயங்களுக்கான முதலுதவி முறைகள்
இதுபோன்று முதலுதவி பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | First Aid |