Suffocation First Aid Treatment in Tamil
இன்றைய சுழலில் மனிதனாக பிறந்த அனைவருமே திடமான ஆரோக்கியத்துடன் இருப்பதில்லை. அனைவருக்குமே ஏதாவது ஒரு உடல் நல குறைபாடு இருக்கின்றது. அதனால் ஒருவர் தனது உடல் நல குறைபாட்டால் திடீரென்று பாதிக்கப்படும் பொழுது அவருக்கு அருகில் உள்ளவர்கள் பதட்டப்படாமல் அவருக்கு முதலுதவியை செய்து அதற்கு பின்பு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் அவரின் உயிருக்கு ஆபத்து வராமல் அவரை காப்பாற்றி விட முடியும்.
அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு முதலுதவி சிகிச்சையை பற்றி அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் மூச்சுத்திணறல் வந்தவருக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> காதினுள் உயிருள்ள பூச்சி சென்று விட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா
மூச்சுத்திணறல் வருவதற்கான காரணம்..?
பொதுவாக மூச்சுத்திணறல் வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. அதில் ஒரு சிலவற்றை பார்க்கலாம் ஒருவருக்கு மூக்கடைப்பு ஏற்பட்டிருந்தாலும் அவரால் சுவாசிப்பது மிகவும் கடினமாக இருக்கும். அதனால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படும்.
மேலும் ஒருவர் ஆஸ்துமா மற்றும் நிமோனியா ஆகியவற்றால் பாதிக்கபட்டிருந்தாலும் அவரால் சுவாசிப்பது மிகவும் கடினமாக இருக்கும். அதனால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படும்.
மூச்சுத்திணறல் ஏற்பட்டால் முதலுதவி என்ன செய்ய வேண்டும்:
மூச்சு திணறல் ஏற்பட்டவருக்கு முதலில் செய்ய வேண்டியது அவரை நல்ல காற்றோட்டமான இடத்தில் முன்புறமாக சாய்த்து உட்கார வைக்க வேண்டும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டால் உடனே அவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி என்ன
பின்பு அவர் அணிந்து இருக்கும் ஆடைகள் இறுக்கமாக இருந்தால் அதனை தளர்த்தி விட வேண்டும்.
பின் அவரின் தலையை முழங்கால்களுக்கு நேராக கீழே சாய்த்து கொள்ள வேண்டும். இதனால் அவரின் மூளைக்கு சரியான இரத்த ஓட்டம் கிடைக்கும்.
மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்ட நபரை தலை குணிந்தும், கால்களை உயர்த்தியுள்ள நிலையில் படுக்க வைக்க வேண்டும்.
பின்னர் ஈரமான துணியை எடுத்து மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்ட நபரின் முகம் மற்றும் கழுத்து பகுதியில் போட வேண்டும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> வலிப்பு வந்தால் இந்த முதலுதவியை மட்டும் செய்து விடுங்கள்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | First Aid in Tamil |