திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டால் உடனே அவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி என்ன தெரியுமா?

Advertisement

Heart Attack First Aid At Home in Tamil

நாம் அனைவருமே பார்த்திருப்போம்..! ரோட்டில் திடீரென்று மயங்கி கீழே விழுவார்கள். அல்லது யார் என்று தெரியாமல் கீழ் விழும் போது அதனை பற்றி கவலை இல்லாமல் செல்வோம் அல்லது நமக்கு ஏன் பிரச்சனை என்று பயந்து சிலர் செல்வார்கள்.

ஆனால் அப்படி செல்வது மிகவும் தவறு யாராக இருந்தாலும் நம் கண் முன்பு ஒன்று நடக்கிறது என்றால் அதற்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது. ஒரு சிலருக்கு அவர்களுக்கு என உதவி செய்வது என்று தெரியாமல் அவர்களை எழுப்புவதில் முன்பமரமாக இருப்பார்கள். ஆனால் நன்றாக இருப்பவர்கள் திடீரென்று கீழ் விழும் போது அவர்களுக்கு மாரடைப்பாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு என்ன உதவி செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள். அப்படி விழும்பட்சத்தில் அவர்களுக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் வாயிலாக படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!

மாரடைப்பு முதலுதவி:

மாரடைப்பு வந்த உடன் முதல் 10 நிமிடத்தில் செய்ய வேண்டிய முதலுதவிக்கு பெயர் தான் CPR (Cardiopulmonary resuscitation) என்பது ஆகும். அதனை முதலில் எப்படி செய்வது என்று பார்ப்போம் வாங்க..!

முதலில் ஒருவர் மயங்கி கீழ் விழும் போது அவருக்கு முதலில் நினைவு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதற்கு அவருடைய தோல் பட்டையில் கைகளை வைத்து தட்டி எழுப்புங்கள். அதன் பின் அவருக்கு மூச்சு உள்ளதா என்று தெரிந்துகொள்ள.

அவருடைய தொண்டை பகுதியி பக்கத்தில் கைகளை வைத்து நாடி துடிப்பு உள்ளதா என்று பார்க்க வேண்டும். அவருக்கு மூக்கு பகுதியில் அல்லது நெஞ்சி பகுதியில் மூச்சு விடுகிறாரா என்று தெரிந்துகொள்ள ஒவ்வொன்றாக பார்க்கவும். இது அனைத்தையும் 10 நொடிகளில் செய்து முடிக்கவும்.

இது அனைத்தையும் பார்த்த பின்பும் அவருக்கு மூச்சு இல்லை என்று தெரிந்தால். இவருக்கு (Cardiac Arrest ) அதாவது மாரடைப்பு வந்திருக்கிறது என்று தெரிந்துவிடும்.

CPR Procedure Steps: 

ஸ்டேப்: 1

முதலில் அவரை தரையிலோ அல்லது டேபிள் படுக்கவைக்கவும். அதனை பின் அவருக்கு பக்கத்தில் நீங்கள் முட்டிகால் போட்டு உட்காரவும்.

 cpr procedure steps

பின்பு அவருடைய நெஞ்சி பகுதியில் உங்களுடைய கை இரண்டையும் ஒன்றாக வைத்து 30 முறை வேகமாக அழுத்தவும். இதனை எதற்கு செய்கிறோம் என்றால் நின்று போன இதய துடிப்பை  மீண்டும் துடிக்கவைக்க செய்வது.

இதனை 3 அல்லது 4 நிமிடத்தில் செய்ய வேண்டும் ஏனென்றால் மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லவில்லை என்றால் அந்த மனிதன் இறந்து விடுவார்கள் ஆகையால் விரைவாக செய்வது நல்லது.

செய்ய மறக்காதீர்கள் 👉👉 வலிப்பு வந்தால் இந்த முதலுதவியை மட்டும் செய்து விடுங்கள்.!

ஸ்டேப்: 2

 heart attack first aid at home in tamil

அதன் பின் அவருக்கு மூச்சு கொடுக்கவும். அதாவது அவருடைய தலையின் நெற்றி பகுதியில் கைகளை வைத்து கொஞ்சம் நிமிர்த்திக்கொள்ளவும். தாடையை அமுங்க விடாமல் நிமிர்த்திக்கொள்ளவும்.

cpr procedure steps

பின்பு அவருடைய மூக்கை மூடிகொண்டு வாய் பகுதியில் சுத்தமான மற்றும் மெல்லிதான் துணியை போட்டு வாய் பகுதியில் உங்களுடைய மூச்சை அவருக்கு கொடுக்கவும். அதனை 2 முறை செய்யலாம். உங்கள் வீட்டில் உள்ள உறவினர்கள் என்றால் துணி பயன்படுத்தாமல் செய்யலாம்.

 heart attack first aid at home in tamil

இப்படி செய்யும் போது அவருடைய நெஞ்சி பகுதி தூக்கும் அப்படி தூக்குகிறதா என்று பார்க்கவும். பின்பு அவருடைய நெஞ்சில் கை வைத்து 30 முறை அமுக்க வேண்டும். இதன் போலவே 5 முறை செய்ய வேண்டும்.

இப்படி செய்தால் அவருக்கு நினைவு வந்து கை கால் அசைக்க தொடங்குவார்கள்.

உங்களால் வாய் வைத்து மூச்சு கொடுக்க முடிவில்லை என்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை நீங்கள் அவருக்கு நெஞ்சி பதில் கைகளை வைத்து அழுத்தம் கொடுக்கலாம்.  அதுவும் 1 நிமிடத்திற்கு 100 முதல் 120 முதல் அழுத்தம் கொடுக்கலாம்.

நீங்கள் கொடுக்கும் அழுத்தம் மிகவும் வேகமாகவும் இருக்க கூடாது அதேபோல் மிகவும் குறைவாகவும் இருக்கக்கூடாது. நீங்கள் அழுத்துவது 2 இஞ்சி நெஞ்சி பகுதியை தொடும் அளவிற்கு இருக்க வேண்டும் அதாவது அழுத்தம் இதயத்தை அழுத்தும் அளவிற்கு இருக்க வேண்டும். இது தான் மாரடைப்பு வந்தவருக்கு செய்யும் முதலுதவி ஆகும்.

இதையும் செய்ய மறக்காதீர்கள் 👉👉  பாம்பு கடித்தால் முதலுதவி என்ன செய்ய வேண்டும் தெரியுமா.?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement