பாம்பு கடித்தால் முதலுதவி என்ன செய்ய வேண்டும் தெரியுமா.?

pambu kadithal enna seiya vendum

பாம்பு கடித்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் பாம்பு கடித்தால் முதலுதவி என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். பாம்பு கடித்தால் என்ன செய்வது என்றே தெரியாது. பாம்பு கடித்துவிட்டது என்று சொல்வதற்கே வார்த்தைகள் வராது. பயந்துவிடுவார்கள். இப்பொழுது எந்த விஷ பூச்சிகள் கடித்தாலும் உடனடியாக மருத்துவமனை சென்று விடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் இருந்த காலத்தில் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல முடியாது. ஏனென்றால் அப்பொழுது சைக்கிளில் தான் செல்வார்கள். அதனால் செல்வதற்கு தாமதமாகும். ஆனால் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னரே சில முதலுதவிகளை செய்து விடுவார்கள். அது என்னென்ன முதலுதவி என்று படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..!

இதையும் படியுங்கள் ⇒ கனவில் பாம்பு வந்தால் என்ன பலன்?

பாம்பு கடித்தால் முதலுதவி என்ன செய்ய வேண்டும்:

முதலில் பாம்பு கடித்தால் பயப்பட கூடாது. மன தைரியமாக இருக்க வேண்டும்.

அடுத்து ஆம்புலன்சிற்கு கால் செய்து பாம்பு கடித்தவர் எந்த இடத்தில் இருக்கின்றாரோ அந்த இடத்தின் முகவரியை சொல்லி வர சொல்ல வேண்டும்.

மூன்றாவது பாம்பு கடித்தவருக்கு தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். தண்ணீர் நிறைய குடிக்கும் பொழுது பாம்பின் விஷம் கழிவு நீர் வழியாக வெளியேறிடும்.

நான்காவதாக பாம்பு கடித்தவரை நடந்தோ அல்லது வாகனத்தை ஓட்டி செல்ல கூடாது. வேறு எதவாது வாகனத்தில் பாதுகாப்பாக செல்ல வேண்டும். மேலும் பாம்பு  கடித்த இடத்தை அசையாமல் வைக்க வேண்டும்.

பாம்பு கடித்த இடத்தில் நகை அல்லது இறுக்கமான ஆடைகள் அணிந்திருந்தால் அதை அகற்றி விடுங்கள்.

விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள்.

பாம்பு கடித்தால் செய்ய கூடாதவை:

பாம்பு கடித்த இடத்தை சுற்றி இறுக்கமாக கட்ட கூடாது. மேலும் அந்த இடத்தை கத்தி அல்லது பிளேடு பயன்படுத்தி அந்த இடத்தை கீறி விட கூடாது.

பாம்பு கடித்ததும் மருத்துவமனைக்கு செல்லுவதற்கு முன் நாட்டு மருந்துகளை சாப்பிட கூடாது.

சினிமாவில் பாம்பு கடித்த இடத்தை கீறி விட்டு அந்த இடத்தில் உள்ள இரத்தத்தை உறிஞ்சி எடுக்க கூடாது.

பாம்பு கடித்தால் மேல் கூறப்பட்டுள்ளது போல் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு சென்று விடுங்கள்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil