If A Live Insect Enters The Ear First Aid
வணக்கம் நண்பர்களே..! வாசகர்கள் அனைவருக்கும் ஒரு பயனுள்ள தகவலை கூறப்போகிறேன் என்பதில் மகிழ்ச்சி..! நீங்களும் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி உங்களுக்கு இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள் அதற்கான விட கிடைத்துவிடும். பொதுவாக நம் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டால் உடனே அவர்களுக்கு ஏதும் முதலுதவி செய்ய வேண்டும் என்று நினைப்போம். அதை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டால் உடனே அவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி என்ன
காதினுள் உயிருள்ள பூச்சி சென்று விட்டால் என்ன செய்ய வேண்டும்..?
பொதுவாக நாம் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் போது திடீரென்று ஏதாவது ஒரு பூச்சி காதுக்குள் சென்று விட்டால் என்ன செய்வது. உதாரணத்திற்கு ஒரு எறும்பு காதிற்குள் சென்று விட்டது. அதை எப்படி வெளியில் கொண்டு வருவது என்று தெரியாமல் பலரும் காதை போட்டு ஆடுவது, காதுக்குள் குச்சியை வைத்து குத்துவது போன்ற செயல்களை செய்து வருகின்றோம்.
ஆனால் இப்படி செய்வது தவறான ஓன்று. அதனால் உங்களுக்கு உதவும் வகையில் காதினுள் உயிருள்ள பூச்சி சென்று விட்டால் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!
செய்ய மறக்காதீர்கள் 👉👉 வலிப்பு வந்தால் இந்த முதலுதவியை மட்டும் செய்து விடுங்கள்
♦ முதலில் பூச்சி காதிற்குள் சென்று விட்டால் பயம் கொள்ள வேண்டாம். அடுத்து காதுக்குள் குச்சியையோ அல்லது விரலையோ வைத்து நுழைக்க வேண்டாம்.
♦ சிலர் காதுக்குள் பூச்சி சென்று விட்டால் தண்ணீரை ஊற்றுவார்கள். ஆனால் தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. அதனால் தண்ணீரை ஊற்ற வேண்டாம்.
♦ அதற்கு பதிலாக உடனடியாக காதினுள் எண்ணையையோ அல்லது தண்ணீரில் உப்பு போட்டு கரைத்து காது நிரம்ப ஊற்ற வேண்டும். இதனால் காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும்.
♦ ஒருவேளை பூச்சியின் ஏதாவது ஒரு பகுதி வெளியில் தெரிந்தால், உதாரணத்திற்கு பூச்சியின் கால் பகுதி தெரிந்தால் உடனே அதை பிடித்து வெளியில் இழுக்க கூடாது.
♦ ஆகவே காதுக்குள் பூச்சி சென்றுவிட்டால் அதை சாகடிக்க தான் முயற்சி செய்ய வேண்டும். பின் அதை வெளியில் கொண்டு வரவேண்டும். இதுபோல செய்தால் காதுக்குள் சென்ற பூச்சியை வெளியில் கொண்டு வந்துவிடலாம்.
இதையும் செய்ய மறக்காதீர்கள் 👉👉 பாம்பு கடித்தால் முதலுதவி என்ன செய்ய வேண்டும் தெரியுமா
இதுபோன்று பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | First Aid in Tamil |