இந்தியாவின் முதல் பெண் IAS | First Indian Woman IAS Officer in Tamil
பெண்கள் நமது நாட்டின் கண்கள் என்று போற்றப்படும் இந்த இந்திய நாட்டின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி யார்? என்பதை பற்றியும். அவர் பற்றிய சிறு குறிப்புகளை பற்றியும் இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம். பொது அறிவு சார்ந்த தேர்வுகளில் இது போன்ற கேள்விகள் கேட்படுவது வழக்கம் ஆகவே அதற்கான விடைகளை நாம் அறிந்திருக்க வேண்டுமல்லவா.. அந்த வகையில் இந்த சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி யார்? என்பதை பற்றி இப்பொழுது படித்தறியலாம் வாங்க.
இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி யார்?
விடை: அன்னா ராஜம் மல்ஹோத்ரா
சிறு குறிப்புகள்:
அன்னா ராஜம் 1927-ம் ஆண்டு கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்தவர். அன்னா ராஜம் கோழிக்கோட்டில் தன் பள்ளிபடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்து சென்னை பல்கலைக்கழகத்தில் தன் கல்லூரி படிப்பை முடித்தார்.
பிறகு 1950-ம் வருடம் இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மெட்ராஸ் மாகாணத்திலேயே பொறுப்பேற்றார்.
ராஜாஜி தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது அவருக்குக் கீழ் அன்னா ராஜம் பணியாற்றியுள்ளார்.
ஐ.ஏ.எஸ் தேர்வின் நேர்முகத் தேர்வின்போது, பெண்கள் பணியாற்ற ஏதுவான துறைகளைத் தேர்வு செய்யுமாறு இவரிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அன்னா ராஜம் மக்களுக்காக நேரடியாகக் களமிறங்கிப் பணியாற்றவே விருப்பம் என்று கூறி இவர் அந்தத் துறைகளில் பணியாற்ற மறுத்துவிட்டார்.
அதேபோல், மெட்ராஸ் கேடரிலேயே தனக்குப் பதவி ஒதுக்குமாறு அவர் கேட்டு வாங்கிக்கொண்டார். ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது ஒசூர் சப்-கலெக்டராகப் பதவியேற்றார். அன்னா ராஜம், இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது அவருடன் 8 நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அன்னா ராஜத்துக்குக் கிடைத்தது.
அதேபோல், ராஜாஜி உள்ளிட்ட 7 முதலமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றியவர் என்ற பெருமை பெற்றவர் அவர், 1982-ல் ராஜீவ்காந்தி எம்.பியாக இருந்த போது அவருடன் பணியாற்றிய அவர், டெல்லியில் 1982-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் குழுவின் தலைவராகவும் பதவி வகித்தார்.
அன்னா ராஜமின் சேவைகளைப் பாராட்டி அவருக்குக் 1989-ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. ஐ.ஏ.எஸ் பணியில் அவர் சேரும்போது, `பெண்கள் திருமணம் செய்துகொண்டால் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள்’ என்ற விதி அமலில் இருந்தது. பின்னர் அந்த விதி திருத்தப்பட்டது.
இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் யார்? |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |