இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்

Advertisement

இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும் அவை யாவை | Ilakkiya Vagai Sorkal Ethanai Vagai Padum

வணக்கம் நண்பர்களே… இன்றைய பதிவில் இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும் அவை யாவை.. என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். இது போன்ற பொது அறிவு வினா விடைகளை தெரிந்துகொள்ளும் போது. நீங்கள் அரசு நடத்தும் பொது தேர்வுகளில் கலந்துகொள்ளும் பொது மிகவும் எளிமையாக இருக்கும், சரி வாங்க இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும் என்பதை பற்றி இப்பொழுது காணலாம்.

Ilakkiya Vagai Sorkal Ethanai Vagai Padum Avai Yavai:

இலக்கியங்களில் இடம் பெறும் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை,

1) இயற்சொல்
2) திரிசொல்
3) திசைச்சொல்
4) வடசொல்

இயற்சொல்:

கற்றவர், கல்லாதவர் ஆகிய அனைவருக்கும் எளிதில் பொருள் புரியும் வகையில் உள்ள சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.

(எ.கா) மரம், நடந்தான்

இயற்சொல் இரண்டு வகைப்படும் அவை பெயர் இயற்சொல், வினை இயற்சொல்.

திரிசொல்:

கற்றவர்கள் மட்டும் பொருள் உணர்ந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ள சொற்கள் திரிசொற்கள் எனப்படும்.

(எ.கா) தத்தை, ஆழி, செப்பினான்

திரிசொல் இரண்டு வகைப்படும். அவை,

1) ஒரு பொருள் குறித்த பல திரிசொல்
2) பல பொருள் குறித்த ஒரு திரிசொல்

திசைச்சொல்:

தமிழ்நாட்டுக்கு அப்பால் உள்ள பிற பகுதிகளில் பேசப்படும் மொழிகளிலிருந்து வந்து தமிழ்மொழியில் கலந்து வரும் சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும்.

(எ.கா) ஆசாமி, சாவி

வடசொல்:-

வடமொழி என்று குறிப்பிடப்படும் சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழ்மொழியில் கலந்து வரும் சொற்கள் வடசொற்கள் எனப்படும். வடசொல் இரண்டு வகைப்படும்.

1) தற்சமம்
2) தற்பவம்

அகப்பொருள் இலக்கணம்
தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
அணி இலக்கணம்
இலக்கணம் என்றால் என்ன?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement