உலகின் உயரமான சிலை | Ulagin Uyaramana Silai

Ulagin Uyaramana Silai

உலகின் மிக உயரமான சிலை | World Tallest Statue in Tamil

Ulagin Uyaramana Silai in Tamil: வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுஅறிவு சார்ந்த பகுதியில் உலகின் உயரமான சிலை எது என்று தெரிந்து கொள்வோம். சிலை அமைப்பதற்கான காரணம் ஒருவர் செய்த செயலை நினைத்து அவரை போற்றும் விதமாக அமைக்கபடுகிறது, அந்த விதத்தில் பார்த்தால் நம் நாட்டிற்கு பல சேவைகளை செய்த சிலைகள் உள்ளது. ஒவ்வொரு சிலையுமே அவர்கள் செய்த நலனை போற்றுவதற்காக அமைக்கப்படும். அப்படி அமைக்கபடும் சிலைகள் வெவ்வேறான உயரத்தை கொண்டிருக்கும், அந்த வகையில் இந்த தொகுப்பில் உலகின் உயரமான சிலை எது என்று படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

உலகின் உயரமான கட்டிடம் எது?

உலகின் உயரமான சிலை:

உலகின் மிக உயரமான சிலை

விடை: குஜராத் மாநிலத்தில் உள்ள ஒற்றுமையின் சிலை என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலை தான் உலகின் மிக உயரமான சிலையாகும்.

உலகின் மிக உயரமான சிலை எது?

  • இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களுள் மிகவும் முக்கியமானவர். இந்த சிலை ஒற்றுமைக்கான சிலை என்று அழைக்கப்படுகிறது. சர்தார் வல்லபாய் படேலின் சிலை 182 மீட்டர் உயரத்தை கொண்டது.
  • இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் நர்மதா மாவட்டம், கெவாடியா அருகே உள்ள சர்தார் சரோவர் அணை எதிரே உள்ள சாது பெட் தீவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 20,000 ச.மீ அளவு கொண்ட 12 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. சிலையை இந்தியாவை சேர்ந்த ராம். வி.சுடர் என்பவர் வடிவமைத்தார்.
  • சிலையை கட்டுவதற்கான கட்டுமான பனி 2014-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2018-ம் ஆண்டின் இடையில் முடிவுபெற்றது. இந்த சிலை படேலின் பிறந்த நாளன்று அக்டோபர் மாதம் 31-ம் தேதி 2018-ல் திறக்கப்பட்டது.
  • படேலின் பிறப்பிடமான குஜராத் மாநிலத்தில் அவரை பெருமைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இவர் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டத்தில் ஈடுபட்டார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் முக்கியமாக பங்காற்றியவர்.
  • இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கபடும் வல்லபாய் படேல் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், ஒற்றுமைக்கும், பாதுகாப்பிற்கும் அச்சறுத்தலாக இருந்தவர்களை எதிர்த்து போராடியவர். மேலும் இவரின் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக மத்திய அரசு அனுசரித்து வருகிறது.

 

உலகின் மிக உயரமான சிலைகள்:

உயரமான சிலைகள் உயரம் அமைந்துள்ள இடம் 
ஒற்றுமையின் சிலை அல்லது சர்தார் வல்லபாய் படேல் சிலை  182 மீட்டர் (597 அடி )குஜராத் 
ஸ்பிரிங் டெம்பிள் புத்தர்  128 மீட்டர் (420 அடி)சீனா 
லேக்யுன் செட்கியார் 116 மீட்டர் (381 அடிமியான்மர் 
உஷிகு டய்புட்சு120 மீட்டர் (390 அடி)ஜப்பான் 
சன்யாவின் தெற்கு கியான் யின் 108 மீட்டர்சீனா 
பேரரசர்கள் யான் மற்றும் ஹுவாங்106 மீட்டர் சீனா 
சென்டாய் டய்கனோன் 100 மீட்டர் (330 அடி)ஜப்பான் 
பீட்டர் தி கிரேட் சிலை96 மீட்டர் ரஸ்யா 
தாய்லாந்தில் உள்ள கிரேட் புத்தர்92 மீட்டர் தாய்லாந்து 
லாங்ஷான் புத்தர் சிலை88 மீட்டர் சீனா 

 

உலகின் உயரமான முருகன் சிலை

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil