Advertisement
உலகின் மிகச்சிறிய நாடு | Ulagin Miga Siriya Naadu
இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாடும் ஒரு குறிப்பிட்ட அளவு நிலப்பரப்பை கொண்டுள்ளது. அதிக அளவு நிலப்பரப்பை கொண்ட நாடுகளை நாம் மிகப்பெரிய நாடு என்றும், பரப்பளவு குறைவாக உள்ள நாடுகளை மிகச்சிறிய நாடு என்றும் அழைக்கிறோம். அந்த வகையில் இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் உலகிலேயே மிகச்சிறிய நாடு எது என்றும் அதை பற்றிய ஒரு சிறு குறிப்பையும் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
உலகின் மிகப்பெரிய தீவு |
உலகின் மிகச்சிறிய நாடு எது?
விடை: இத்தாலியில் உள்ள வாடிகன் (Vatican City) நகரம் உலகின் மிகச்சிறிய நாடாகும்.
World Smallest Country in Tamil:
- இத்தாலி நாட்டின் தலைநகரம் ரோம், தலைவர் போப். இந்த நாட்டின் மொத்த பரப்பளவு 0.44 கிமீ 2 ஆகும். இந்த நாட்டில் மக்கள் தொகை 1000 ஆக உள்ளது. பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் குறைவாக உள்ளதால் இதனை உலகின் மிகச்சிறிய நாடு என்று அழைக்கிறார்கள்.
- கத்தோலிக்க திருச்சபையின் மையமாக இந்த நாடு உள்ளது. செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா என்று அழைக்கப்படும் மிகப்பெரிய தேவாலயம் வாடிகன் நகரில் அமைந்துள்ளது. 1929-ல் வாடிகன் ஒரு தனி நாடாக அறிவிக்கப்பட்டது. 1929-ம் ஆண்டு, முசோலினி போப்புடன் செய்து கொண்ட லாட்டரன் உடன்படிக்கையின் போது உருவாக்கப்பட்டது.
- இது ஹோலி நாடு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாட்டில் உள்ள மக்கள் சுதந்திரமாக எந்த ஒரு வேலையையும் செய்ய முடியும். உலகில் இருக்கும் தீவுகளை விட மிகச்சிறியது வாடிகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்டின் பொருளாதாரம் தபால் தலைகள், சுற்றுலாப் பயணிகள், அருங்காட்சியகம் போன்ற இடங்களில் வசூலிக்கப்படும் நுழைவு கட்டணம் மூலம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
- வாடிகன் என்ற பெயர் ரோமன் குடியரசு காலத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வந்தது. வாடிகன் மலை என பொருளை கொண்ட லத்தின் மொழியான வாட்டிகனில் இருந்து நாட்டின் பெயர் வந்தது.
உலகின் மிகச்சிறிய நாடுகள்:
நாட்டின் பெயர் (World Smallest Country in Tamil) | பரப்பளவு |
வாடிகன் நகரம் | 0.44 km2 |
மொனாக்கோ | 2 km2 |
நவ்ரூ | 21 km2 |
துவாலு | 26 km2 |
சான் மரினோ | 61 km2 |
லிச்சென்ஸ்டீன் | 160 km2 |
மார்ஷல் தீவுகள் | 181 km2 |
செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் | 261 km2 |
மாலத்தீவு | 300 km2 |
மால்டா | 316 km2 |
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட டாப் 10 நாடுகள் |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |
Advertisement