உலகின் யோகா தலைநகரம் | Ulagin Yoga Nagaram

Ulagin Yoga Nagaram

உலகின் யோகா தலைநகரம் பெயர்

World Yoga Thalainagaram: வணக்கம் நண்பர்களே இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் உலகின் யோகா தலைநகரம் எது என்பதை தெரிந்து கொள்ளலாம். சிறு வயதில் இருந்தே இது போன்ற சில அறிவு சார்ந்த கேள்வி பதில்களை தெரிந்து கொள்வதால் எதிர்காலத்தில் அரசு வேலைகளுக்கு செல்வதாக இருந்தால் அப்போது இது போன்ற கேள்விகள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இது போன்ற கேள்வி பதில்களை நாங்கள் எங்களுடைய பொதுநலம்.காம் பதிவில் பதிவிட்டு வருகிறோம், அதனை படித்து அனைவரும் பயன்பெறுங்கள்.

உலகின் யோகா தலைநகரம் எது? – Ulagin Yoga Thalainagaram Tamil:

விடை: உலகின் யோகா தலைநகரம் என்று அழைக்கப்படுவது ரிஷிகேஷ் நகரம் ஆகும்.

Ulagin Yoga Nagaram – உலகின் யோகா தலைநகரம்:

 • இந்த நகரம் உத்தரகாண்ட் மாநிலத்தில் Dehradun மாவட்டத்தில் உள்ளது. ஹரித்வாரிலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் ரிஷிகேஷ் நகரம் உள்ளது. ரயில் பயணம் மற்றும் பேருந்து பயணம் ஹரித்வாரிலிருந்து மேற்கொள்வதற்காக பல வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.
 • இந்த நகரத்தில் அதிக அளவு யோகா மையங்கள் உள்ளன. பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் இங்கே வந்து யோகா கற்றுச் செல்லுகின்றனர். அதனால் இந்த நகரம் யோகாவின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.

பெயர் காரணம் – Ulagin Yoga Thalainagaram:

 • ரிஷிகேஷ் என்பதற்கு அர்த்தம் புலன்களின் கடவுள். ரப்யா ரிஷி என்பவரின் வேண்டுதலால் விஷ்ணு பகவான் அவர் முன் தோன்றினார் என்று கூறப்படுகிறது. அவரின் நினைவாக இந்த நகருக்கு ரிஷிகேஷ் என்று பெயர் வைத்துள்ளனர். இது விஷ்ணு பகவானின் பெயர் ஆகும்.

உலகின் யோகா தலைநகரம் எது? – World Yoga Thalainagaram:

 • நான்கு புனித தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, மற்றும் யமுனோத்ரி போன்ற தலங்களில் சார் தாம் யாத்திரை மேற்கொள்வதற்கு தொடக்க பாதையாக இருக்கிறது.
 • இந்துக்களின் புனித நகரம் மற்றும் பிரபலமான யாத்திரை மையமாகவும் உள்ளது.
 • இமாலய மலைத்தொடர்களின் நுழைவாயில் என்றும் கூறப்படுகிறது.
 • ரிஷிகேஷ் நகரத்தின் வழியாக பாயும் புனித ஆற்றின் முனையில் தியானம் செய்வது அங்கு வரும் மக்களுக்கு ஒரு மன அமைதியை கொடுக்கிறது.

உலகின் யோகா தலைநகரம் – Ulagin Yoga Thalainagaram:

 • பரமார்த்த நிகேதன், சிவானந்தா ஆசிரமம், யோகி நிகேதன், ஏரோவர்லி ஆசிரமம், ஃபூல் சட்டி ஆஸ்ரம், ஆனந்த் பிரகாஷ் ஆஷ்ரம், ஓம்கர்நந்தா ஆசிரமம் மற்றும் ஸ்வாமி ராம் சதக் கிராம் ஆஷ்ரம் போன்ற ஆசிரமங்கள் யோகா செய்வதற்கு என பயன்படுத்தப்படும் பிரபலமான ஆசிரமங்கள் ஆகும்.

சாகச நகரம் – உலகின் யோகா தலைநகரம்:

 • டிரெக்கிங் மற்றும் கேம்பிங், வொயிட் வாட்டர் ரேஃப்டிங், ரப்பெல்லிங், பன்ஜீ ஜம்பிங், ரிவர் கிளிஃப் ஜம்பிங் போன்ற சாகசங்கள் இந்த நகரத்தில் மேற்கொள்ளப்படுவதால் இந்த நகரம் இந்தியாவின் சாகச நகரம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.
 • இந்த நகரத்தில் வாழும் மக்களின் சராசரி விகிதம் 59,671 ஆகும்.  இது கடல் மட்டத்தில் இருந்து 360 மீட்டர் உயரத்தில் உள்ளது.
 • இந்த நகரத்திற்கு செல்ல உகந்த மாதங்கள் செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்கள் ஆகும்.
உலகின் மிகப்பெரிய அணை எது ?
உலகின் மிகப்பெரிய தீவு

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil