உலக சுற்றுலா தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? | World Tourism Day in Tamil
வணக்கம் தோழிகளே இன்றைய பொது அறிவு பகுதியில் உலக சுற்றுலா தினம் எப்போது என்று தெரிந்துக்கொள்ளலாம். இந்த மாதிரியான தினங்கள் பற்றிய பொது அறிவு விஷயங்களை நாம் அனைவருமே கட்டாயமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். போட்டி தேர்வுகளில் பெரும்பாலும் தினங்கள் பற்றிய கேள்விகள் கேட்கப்படுகிறது. பள்ளி பிடிக்கும் மாணவர்கள் முதல் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் நிலையில் இருப்பவர்கள் வரை பொது அறிவு சமபந்தமான பல விஷயங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். தேர்விற்கு அந்த நேரத்தில் படிக்கும் கேள்விகள் சட்டென சிலருக்கு மறந்துவிடும். தினமும் படிப்பவர்களுக்கு ஞாபகத்தில் அப்படியே இருக்கும். உங்களுடைய அறிவுத்திறன் மேம்பட எங்கள் பதிவில் பல விதமான பொது அறிவு தகவலை பதிவிட்டு வருகிறோம். படித்து பயன் பெறுங்கள்.
முக்கிய தினங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள | CLICK HERE>> |
உலக சுற்றுலா தினம் எப்போது?
விடை: ஐ.நா சபை உலக சுற்றுலா தினமாக 1970-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதியை அறிவித்தது.
சுற்றுலா தினம் எதற்காக தெரியுமா?
சுற்றுலா தினத்தின் முக்கிய மேற்கோளாக இருப்பது சுற்றுலா மூலம் பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச புரிந்துணர்வு, சமாதானம் ஆகியவற்றை மேம்படுத்துதலும் மனித குலம் அனைவரும் அடிப்படைச் சுதந்திரத்தை அடைவது குறித்த அறிவுகளை பெறுவதும் தான்.
உலக சுற்றுலா தினம்:
சுற்றுலா செல்ல விரும்பாத மனிதர்கள் இந்த உலகில் யாரும் இருக்கமாட்டார்கள். அதிலும் விடுமுறை என்று வந்துவிட்டாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுற்றுலா செல்ல ஆசைப்படுவார்கள். அந்த அளவிற்கு சுற்றுலாவானது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
சர்வதேச யோகா தினம் எப்போது? |
சுற்றுலா நினைவுகள்:
சுற்றுலா என்பது வெறும் பயணத்தோடு மட்டும் நிறைவு பெறாது. சுற்றுலாவில் நாம் நம்முடைய நண்பர்களோடு சேர்ந்து பயணம் செய்த நினைவுகள், ஒன்றாக அமர்ந்து உணவு உண்ட நினைவுகள், உறவினர்களுடன் அரட்டை அடித்த சுற்றுலா நாட்கள் இது மாதிரியான பல நினைவுகளை கூறும் வகையில் அமைந்திருப்பது தான் சுற்றுலா தினம்.
உலகிலையே மிகப்பெரிய துறையாக விளங்குவது சுற்றுலாத்துறை தான். உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொழில் சுற்றுலா. போக்குவரத்துறை, உணவுத்துறை, இடவசதி, ஓய்வு மற்றும் கேளிக்கை என 5 துறைகளை சார்ந்து விளங்குகிறது சுற்றுலா துறை. வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய பலம் சுற்றுலா தான்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |