உலக புத்தக தினம் எப்போது? | Ulaga Puthaga Dhinam

Ulaga Puthaga Dhinam

உலக புத்தக தினம் கொண்டாடப்படும் நாள் எது? | World Book Day in Tamil

வணக்கம் நண்பர்களே.. இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் நமது அறிவை மேம்படுத்தக்கூடிய உலக புத்தக தினம் எப்போது என்று தெரிந்துக்கொள்ளலாம். புத்தகத்தை விட உலகில் சிறந்த நண்பர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஒரு புத்தகம் தான் நமது வாழ்க்கையை தீர்மானிக்க கூடியதாக இருக்கிறது. அப்படிப்பட்ட புத்தக தினம் எப்போது என்று தெரிந்துகொள்ளாமல் இருக்கலாமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்..

உலக புற்றுநோய் தினம்

உலக புத்தக தினம் எப்போது?

விடை: உலக புத்தக தினமானது ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 23-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

புத்தக தினத்தின் சிறப்பு:

புத்தக தினத்தன்று உலகம் முழுவதும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் பல இடங்களில் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.

ஸ்பெய்னின் மாட்ரிட் முதல் உலக புத்தக தலை நகரமாக தேர்வு செய்யப்பட்டது.

ஒரு புத்தகமானது நமது வாழ்க்கைக்கு நல்ல வழிகாட்டியாகும். நல்லொழுக்கத்தை கற்று தருவதற்கும், அறிவை வளர்த்து கொள்வதற்கும் இது போன்ற பல வழிகளில் புத்தகம் நமக்கு நல்ல வழிகாட்டியாக உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

உலக காற்று தினம்

முதல் புத்தக தினம் எப்போது கொண்டாடப்பட்டது:

உலகின் முதல் புத்தக தினமானது 1995-ல் கொண்டாடப்பட்டது.

புத்தக வகைகள்:

புத்தகத்தில் நமக்கு தன்னம்பிக்கையை வளர்க்கக்கூடிய புத்தகங்கள், ஒவ்வொருவருடைய வாழ்க்கை வரலாறு, கலாச்சாரம், மொழி, அறிவியல் சார்ந்த புத்தகம், இலக்கிய வகை, அறிஞர்கள் பற்றிய பல வகையான புத்தகங்கள் அமைந்துள்ளது.

புத்தகத்தின் சிறப்பு:

ஒரு புத்தகம் 100 நண்பர்களுக்கு சமம் போன்றது. நமக்கு தெரியாத அனைத்து விஷயங்களையும் ஒரு புத்தகத்தில் நாம் தெரிந்துக்கொள்ளலாம். கல்வி கற்பது ஒருநாளும் வீண்போவதில்லை.

ஏப்ரல் 23 அன்று புத்தக தினம் கொண்டாடப்படும் அன்று மற்றொரு நிகழ்வும் இருக்கிறது. அன்றைய தினத்தில் தான் உலக புகழ்பெற்ற சேக்ஸ்பியர் பிறந்தநாளும், நினைவு நாளும் ஏப்ரல் 23 என்பது குறிப்பிடத்தக்கது.

உலக தண்ணீர் தினம் என்று கொண்டாடப்படுகிறது தெரியுமா?

 

இந்தியா உள்ளிட்ட 100-ற்கும் மேற்பட்ட நாடுகளில் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. சென்னையில் 3 நாள் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil