உலக வனவிலங்கு தினம் | Ulaga Vana Vilangu Thinam

Ulaga Vana Vilangu Thinam

உலக வனவிலங்கு நாள் | Ulaga Vana Vilangugal Dhinam 

வணக்கம் நண்பர்களே.. இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் உலக வனவிலங்கு நாள் எப்போது என்று தெரிந்துகொள்ளலாம். பொது அறிவு சார்ந்த கேள்வி பதில்களானது இளம் வயதிலிருந்து நாம் படிக்கும் ஆர்வத்தை கற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் நீங்கள் அரசு வேலைக்கு செல்ல விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் கற்றுக்கொண்ட பொது அறிவு சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு கை கொடுக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் ஒவ்வொரு தேர்வாளர்களுக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க இப்போது உலக வனவிலங்கு நாள் எப்போது என்று படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

உலக அமைதி நாள்

உலக வனவிலங்கு தினம் எப்போது?

விடை: உலக வனவிலங்கு தினமானது அக்டோபர் 4 அன்று கொண்டாடப்படுகிறது.

இந்த உலக வனவிலங்கு தினம் இத்தாலி நாட்டை சேர்ந்த வன ஆர்வலர் பிரான்சிஸ் அசிசி என்பவருடைய நினைவாக இந்த தினம் உலக வனவிலங்கு நாளாக கொண்டாடப்படுகிறது.

அசிசி என்பவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் விலங்குகள் மீது அதிக ஆர்வத்தினை கொண்டவராய் இருந்தார். ஆர்வத்தை மட்டும் செலுத்தாமல் விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு அவற்றை பாதுகாத்துக்கொள்வதிலும் ஆர்வமாய் இருந்தார். இதன் காரணமாகத்தான் இவருடைய நினைவு தினத்தை உலக விலங்குகள் தினம் அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

முக்கிய தினங்கள் 2022

விலங்குகள் தினத்தின் நோக்கம்:

அக்டோபர் 4 அன்று உலக விலங்குகள் தினத்தின் நோக்கமானது உலகம் முழுவதும் உள்ள விலங்குகளின் நிலையை மேம்படுத்துவதற்காக, உலகம் முழுவதிலும் இருக்கின்ற விலங்கு நலன்புரி அமைப்பின் தரத்தினை உயர்த்துவதாகும்.

உலக விலங்கு தின கொண்டாட்டத்தை உருவாக்குவதன் மூலமாக விலங்கு நல இயக்கத்தை ஒன்றிணைத்து, உலகளாவிய சக்தியாக அணிதிரட்டி உலகத்தை அனைத்து விலங்குகளுக்கும் ஏற்ற சிறந்த இடமாக மாற்றுவதே ஆகும்.

விலங்குகளின் பாதுகாப்பு:

இன்றைய காலக்கட்டத்தில் புலிகளின் தோலை உடைகளாவும், இறைச்சிக்காக மான்களை வேட்டையாடி உண்பதும், தந்தத்திற்காகவும் யானைகளை கொள்வது என மனிதர்களால் விலங்குகள் வேட்டையாடப்படுகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் விலங்குகளைப் அழிக்காமல் பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமை. விலங்குகளை பாதுகாப்பதற்கு பல விழிப்புணர்வு திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது.

காடுகளானது நம் நாட்டிற்கு வேலியாகவும், விலங்குகளை அழிக்காமல் பாதுகாப்பதும் நம்முடைய ஒவ்வொருவரின் கடமையாகும்.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil