சொல்லின் செல்வர் யார்? | Sollin Selvar Yaar

Sollin Selvar Yaar

சொல்லின் செல்வர் என்று அழைக்கப்படுபவர் யார்? | Sollin Selvan in Tamil

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.. பொது அறிவு கேள்வியான பதிவு தான் இது. எல்லோருக்கும் அனைத்து விதமான பொது அறிவு சார்ந்த வினா விடைகள் தெரிந்திருக்கும் என்று கூற முடியாது. பொது அறிவு விஷயமானது பள்ளி படிக்கும் மாணவர்கள் முதல் போட்டி தேர்வுகள் வரை பொது அறிவு தேவைப்படுகிறது. தொடர்ந்து நமது பதிவில் பலவகையான பொது அறிவு (GK in Tamil) சார்ந்த விஷயங்களை பதிவு செய்து வருகின்றோம். இந்த பதிவில் “சொல்லின் செல்வர்” என்று அழைக்கப்படுபவர் யார் என்று தெரிந்துகொள்ளலாம்.

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?

சொல்லின் செல்வர் யார்?:

விடை: மக்கள் அனைவராலும் சொல்லின் செல்வர் என்று அழைக்கப்படுபவர் ரா.பி.சேதுப்பிள்ளை

ரா.பி.சேதுப்பிள்ளை வரலாறு:

திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலியில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள இராசவல்லிபுரம் என்கிற கிராமத்தில் பிறந்தார். இவர் வசித்த பிறவிப்பெருமாள் – சொர்ணம் தம்பதியின் பதினோராவது பிள்ளையாகப் 1896 மார்ச் 2-ம் தேதி பிறந்தார்.

இராசவல்லிபுரம் ஊரின் முதல் எழுது ‘இரா’, பிறவிப்பெருமான்பிள்ளை தந்தையின் முதல் எழுத்து ‘பி’ முன்னெழுத்துகளாக கொண்டு இரா.பி.சேதுப்பிள்ளை என்று அழைத்தனர். இவர் இயற்றிய தமிழன்பம் என்ற நூலுக்கு இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

இவர் ஐந்தாம் வயதில் உள்ளூர் திண்ணை பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றவர். தமிழ் நீதி நூல்களை நன்கு கற்றறிந்தவர். அவர் படித்த பச்சையப்பன் கல்லூரியிலேயே ஆசிரியராக பணியாற்றியவர்.

1923-ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் வழக்கறிஞராக பணியாற்றினார். வழக்கறிஞராக இருந்தாலும் தமிழ் மீது அதிக பற்றுள்ளவர். பல்கலைக்கழகப் பணிகளை சிறப்பகச் செய்த சேதுப்பிள்ளை, தமது செந்தமிழ்ப் பேச்சால் சென்னை மக்களை ஈர்த்தார்.

இவர் எழுதிய முதல் கட்டுரை நூல் “திருவள்ளுவர் நூல் நயம்” என்பதாகும்.

இவரின் படைப்புகள்:

 1. சிலப்பதிகார நூல்நயம்
 2. தமிழின்பம்
 3. தமிழ்நாட்டு நவமணிகள்
 4. தமிழ்வீரம்
 5. தமிழ்விருந்து
 6. வேலும்வில்லும்
 7. வேலின்வெற்றி
 8. வழிவழி வள்ளுவர்
 9. ஆற்றங்கரையினிலே
 10. தமிழ்க்கவிதைக் களஞ்சியம்
 11. செஞ்சொற் கவிக்கோவை
 12. பாரதியார் இன்கவித்திரட்டு போன்ற நூல்கள் இவர் இயற்றியதாகும்.
இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் யார்?

நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்:

 1. ஆற்றங்கரையினிலே (நூல்)
 2. கடற்கரையினிலே (நூல்)
 3. கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர் (நூல்)
 4. தமிழ் விருந்து (நூல்)
 5. தமிழக ஊரும் பேரும் (நூல்)
 6. தமிழர் வீரம் (நூல்)
 7. தமிழின்பம் (நூல்)
 8. மேடைப் பேச்சு (நூல்)
 9. வேலின் வெற்றி (நூல்)

தமிழுக்காக இவர் ஆற்றிய பணிகளுக்காகச் சென்னைப் பல்கலைக்கழகம் ‘முனைவர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கால் நூற்றாண்டு காலம் பணியாற்றியதைப் பாராட்டி “வெள்ளிவிழா” எடுத்து , “இலக்கியப் பேரறிஞர்” என்ற பட்டத்தையும் அளித்து சிறப்பித்தது.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil