டாக்சிக் சரணாலயத்தில் உள்ள உயிரினம்
இந்த உலகில் பலவகையான சரணாலயங்கள் உள்ளன.. அவற்றில் ஒன்று தான் டாக்சிகாம் சரணாலயம். இந்த சரணாலயத்தில் புகழ்பெற்ற உயிரினம் உள்ளது. அதனை பற்றி தான் நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். இது போன்ற பொது அறிவு சார்ந்த விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்வதினால் போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக தேர்வு நடைபெறும் சமயங்களில் நாம் அவசர அவசரமாக பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. ஆகவே தினமும் ஒரு பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள் அது உங்கள் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க டாக்சிகாம் சரணாலயத்தில் புகழ்பெற்ற உயிரினம் எது என்பதை பற்றி இப்பொழுது நாம் தெரிந்து கொள்வோம்.
டாக்சிகாம் சரணாலயத்தில் புகழ்பெற்ற உயிரினம் எது?
விடை: ஹங்குல் என்ற சிவப்பு மான்
20 ஆம் நூற்றாண்டில் ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசங்களில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஹங்குல் காணப்பட்ட நிலையில், தற்போது 150 ஹம்முல் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.
ஸ்ரீ நகரில் உள்ள டாக்சிகாம் வனவிலங்கு சரணாலயம் கடல் மட்டத்தில் இருந்து. குறைந்தபட்சம் 5500 அடிதூரத்தில் இருந்து அதிகபட்சம் 14500 அடிதூரம் வரையிலான மாறுபட்ட உயிரினங்களுடன் பறந்து விரிந்து இருக்கும் சரணாலயம் ஆகும்.
இந்த டாக்சிகாம் சரணாலயம் தேசிய பூங்காவாக 1951-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த சரணாலயத்தில் 141 சதுர மீட்டருக்கு பறந்து விரிந்திருக்கும் இந்த சரணாலயத்தில் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றான ஹங்குல் என்ற சிவப்பு மான்களை உடைய ஒரே சரணாலயமாகும்.
இந்த சரணாலயம் மேல் டாக்சிகாம், கீழ் டாக்சிகாம் என்று இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த சரணாலயம் ஊசியிலைக் காடுகள், பரந்த புல்வெளிகள், பெரிய இலைகளை கொண்ட மரங்கள் மற்றும் மழைக்கால காடுகள் என பல்வகைப்பட்ட தாவரங்களை கொண்டுள்ளது.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |