தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் பெயர் என்ன?

Advertisement

தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் என்று போற்றப்படுபவர் யார்? | Tamilnattin Sakraties in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் என்று போற்றப்படுபவர் யார்? (amilnattin Sakraties in Tamil) என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க. போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் நண்பர்களுக்கும். பொது அறிவு சார்ந்த (GK  in Tamil) விஷயங்களை தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவில் தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் என்று போற்றப்படுபவர் யார்? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் பெயர் என்ன?

 தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என்று போற்றப்படுபவர் பெரியார் என்று பரவலாக அழைக்கப்படும் ஈ. வெ. இராமசாமி ஆவர், தந்தை பெரியார் செப்டம்பர் 17, 1879-ம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார். 

சரி இவருடைய வாழ்க்கை வரலாறை பற்றி சுருக்கமாக இங்கு பார்க்கலாமா?

இதையும் கிளிக் செய்து படியுங்கள்—> ராஜாஜி உப்பு காய்ச்சிய இடம் எது?

தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு:-

  • தந்தை பெரியார் தனது படிப்பை ஐந்தாம் வகுப்போடு நிறுத்திக் கொண்டார். 19 வது வயதில் திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு பெண்குழந்தை பிறந்தது ஆனால், அந்த குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது.
  • 1902-ம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களை நடத்தி வைத்தார். அனைத்து சாதியினருடனும் சேர்ந்து சமமாக உணவு சாப்பிட்டார். இதனால் அவருக்கும், அவர் தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, துறவு பூண்டு காசிக்கு சென்றார் தந்தை பெரியார். காசியில் அவருக்கு நடந்த நிகழ்வுகளால் இறைமறுப்பாளராக தன்னை மாற்றிக் கொண்டார்.
  • ஆரம்ப காலத்தில் காந்தி கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு 1919-ம் ஆண்டு தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தி தலைமையில் காங்கிரஸ் நடத்திய பல போரட்டங்களில் கலந்துக்கொண்டு சிறை சென்றார். 1922-ம் ஆண்டு சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தந்தை பெரியார் தேர்தெடுக்கப்பட்டார்.
  • 1939-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் சிறை வைக்கப்பட்டிருந்த இராமசாமி விடுதலையானதும், நீதிக்கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார். பின்னர் ‘நீதிக்கட்சி’ என்ற பெயரை 1944-ம் ஆண்டு ‘திராவிட கழகம்’ என பெயர் மாற்றினார் பெரியார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சேர்ந்தது.
  • தந்தை பெரியாருக்கு , 1973-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டது.
  • உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார், டிசம்பர் 24-ம் தேதி 1973-ம் ஆண்டு, தனது 94_வது வயதில் காலமானார்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள்—> பதவியை ராஜினாமா செய்த முதல் இந்திய பிரதமர் யார்?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement