நவீன இந்தியாவின் தந்தை யார் | Naveena Indiavin Thanthai

Advertisement

நவீன இந்தியாவின் தந்தை | Who is The Father of Modern India in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் நவீன இந்தியாவின் தந்தை யார் என்று தெரிந்துகொள்ளலாம். இது போன்ற பொது அறிவு சார்ந்த கேள்வி பதில்களை இளம் வயதில் இருந்தே தெரிந்துகொள்வதன் மூலம் உங்களது நினைவாற்றல் திறன் அதிகரிக்கும். மேலும் பொது தேர்வுகளில் கலந்துகொள்ளும் போது இது போன்ற கேள்விகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். சரி வாங்க நவீன இந்தியாவின் தந்தை யார் என்று பார்க்கலாம்.

நவீன இந்தியாவின் தந்தை யார்?

விடை: இராஜாராம் மோகன் ராய் நவீன இந்தியாவின் தந்தை ஆவார்.

பிறப்பு:

  • Naveena Indiavin Thanthai: வங்காளத்தில் இருக்கும் ஹூக்ளி மாவட்டத்தில், ராதாநகர் என்ற கிராமத்தில் 1772-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி பிறந்தார். தந்தையின் பெயர் ராம்காந்தோ ராய், தாயாரின் பெயர் தாரிணி ஆவார்.

கல்வி:

  • பாட்னாவில் தனது உயர்படிப்பினை முடித்தார், அங்கு அவர் வங்காள மொழி, பாரசீகம், அரபு மற்றும் சமஸ்கிருதம் போன்ற மொழிகளை கற்றுக்கொண்டார். பிராமணராக இருந்தாலும் சாதி, மதம் வேற்றுமை மற்றும் மூட நம்பிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்று செயல்பட்டார். இதனால் தந்தைக்கும் இராஜாராம் மோகன் ராய் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார்.
  • வீட்டை விட்டு வெளியேறி திபெத் சென்றார். பயணத்திற்கு பிறகு வீடு திரும்பிய இராஜாராம் மோகன் ராய்க்கு அவரின் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். கல்யாணத்திற்கு பிறகு வாரணாசி சென்று வேதங்கள், உபநிடதங்கள், இந்துமத தத்துவங்கள் போன்றவற்றை பயின்றார்.

தொழில்:

  • Naveena Indiavin Thanthai: தந்தையின் மறைவிற்கு பிறகு முர்ஷிதாபாத்திற்கு வந்தார். கொல்கத்தாவில் சிறிது காலம் வட்டிக்கடையில் வேலை பார்த்தார். பின்னர் கிழக்கு இந்திய நிறுவனத்தின் வருவாய்த் துறையில் 1809-ம் ஆண்டு முதல் 1814-ம் ஆண்டு வரை வேலை செய்தார்.

நாட்டுப்பணி:

  • சுற்றுச்சூழலில் நடக்கும் கொடுமைகளை கண்டு 1814-ம் ஆண்டு ஆத்மிய மக்களவை என்ற அமைப்பை தொடங்கினார்.
  • பெண்களின் உரிமைக்காக பாடுபட்ட தலைவர்களுள் இவரும் ஒருவர். பெண்களுக்கு கட்டாய கல்வி வேண்டும் என்ற கொள்கைக்கு ஆதரவு காட்டினார்.
  • கல்விக்காக பாடுபட்ட மோகன் ராய் அவர்கள் தமிழ் வழி கல்வியை விட, ஆங்கில வலி கல்வி நன்மையானது என்று எண்ணி 1822-ம் ஆண்டு, ஆங்கில கல்வி வழியில் ஒரு பள்ளியை நிறுவினார்.

பிரம்மா சமாஜ்:

  • பிரம்ம சமாஜம் என்ற அமைப்பை 1828-ம் ஆண்டு நிறுவினார். இந்த அமைப்பின் மூலம் கடவுளின் பேரை சொல்லி நடக்கும் தீமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார்.
  • கடவுளுக்கும், மனிதர்களுக்கும் ஒரு நெருங்கிய நட்புறவை உருவாக்க வேண்டும் என்பதே இந்த அமைப்பின் கொள்கையாகும்.
  • மேலும் இந்த பிரம்ம சமாஜ் மூலம் பெண்கள் உடன் கட்டை ஏறுதலை தடுக்க வேண்டும் என்று பாடுபட்டு 1833-ம் ஆண்டு லார்ட் வில்லியம் பென்டிக் ஆட்சியில் ஒரு சட்டம் கொண்டு வந்து, அதன் மூலம் உடன் கட்டை ஏறுதலை ஒழித்தார்.

மறைவு:

  • சமுதாயத்திற்கு பல நன்மைகளை செய்த இராஜாராம் மோகன் ராய் அவர்கள் மூளைக்காய்ச்சல் காரணமாக செப்டம்பர் மாதம் 27-ம் தேதி 1833-ம் ஆண்டு நவீன இந்தியாவின் தந்தை இவ்வுலகை விட்டு மறைந்தார்.
புதுக்கவிதையின் தந்தை யார்?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement