பசுவைப் பற்றி பத்து வரிகள் | Lifespan of a Cow in Tamil
தினமும் பல விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள்..! அதிலும் பொது அறிவு கேள்விகள் நிறைய Pothunalam.com பதிவில் பதிவிட்டு வருகிறோம். அதனை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்..! மேலும் இன்றைய பதிவில் பசுமாட்டின் ஆயுட்காலம் எவ்வளவு என்பதை பற்றியும் மேலும் பசு மாட்டை பற்றிய தகவலையும் தெரிந்து கொள்வோம் வாங்க..!
Lifespan of a Cow in Tamil:
பசுக்கள் குறைந்தபட்சமாக 15 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழுகின்றன..!பசுவைப் பற்றி பத்து வரிகள்:
பசு மாட்டால் மாடிப்படி ஏற முடியும். ஆனால் இறங்க முடியாது. ஏனென்றால் அதனையுடைய முழங்காலுக்கு சரியாக வளையும் தன்மை கிடையாது.
பசு மாடு அதனுடைய வாழ்நாளில் 2 லட்சம் முதல் 4 லட்சம் வரை பால் கொடுக்கும் திறன் கொண்டது.
ஒரு நாளில் 10 முதல் 15 முறை கீழே உட்கார்ந்து எழும் தன்மை கொண்டது.
சாதாரணமாக 500 கிலோ எடை உள்ள பசு மாடு ஆண்டுக்கு சுமார் 10 டன் சாணியை கொடுக்கும்.
ஒரு நாளில் 6 முதல் 7 மணி நேரம் இறை உண்ணவும், 7 முதல் 8 மணி நேரம் அதனை அசைபோடவும் செய்கிறது.
ஒரு நாளுக்கு 40,000 முதல் 50,000 வரை தாடையை அசைக்கிறது.
முட்டையிடும் விலங்குகள் எது..? |
ஒரு பசு மாடு நாள் ஒன்றுக்கு 10 லிட்டர் முதல் 12 லிட்டர் வரை சிறு நீரும், 15 கிலோ முதல் 20 கிலோ சாணியும் தருகிறது.
ஒரு நாளுக்கு பசு மாடு 100 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வல்லது. மாடு பற்களால் எதையும் உண்ணுவது இல்லை, நாக்காலும் இரலாலும் மட்டுமே உண்ணும் திறன் கொண்டது.
பசு மாட்டிற்கு வயிறு பகுதி 1 உள்ளது. ஆனால் உண்ணும் உணவு செரிமானத்திற்கு 4 பகுதி உள்ளது.
மாட்டின் கண்கள் இருபுறம் இருப்பதால் 4 பக்கமும் பார்க்கும் திறன் கொண்டது. கிட்டத்தட்ட 360 டிகிரி முழு வட்டம் ஒரே சமையத்தில் பார்க்கும்.
பசு மாடு நுகரும் திறன் அதிகம் கொண்டது. சுமார் 6 கிலோ மீட்டர் வரை உள்ள பசுமையை கண்டறிந்து அதனை சாப்பிடும் திறன் கொண்டது.
பசுமாட்டின் உடல் வெப்ப நிலை 101.5 டிகிரி பாரன்ஹீட். இதுவரை அதிக நாட்கள் வாழ்ந்த மாட்டின் வயது 48 வயது 9 மாதங்கள் ஆகும்
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 நீரை அருந்தாத நீர்வாழ் உயிரினம் எது..?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |