20 முக்கிய இந்திய விருதுகள் பெயர்கள்..!

விருதுகள் பெயர்கள்

விருதுகள் பெயர்கள்..! Indian Awards Name List..!

ஹாய் பிரண்ட்ஸ்.. இந்த உலகில் சாதனை செய்த அனைவருக்குமே கௌரவபடுத்தும் வகையில் அவர்களுக்கு விருதுகள் வழங்குவது வழக்கம். இத்தகைய விருது அவர்களது வாழ் நாள் முழுவதும் மகிழ்ச்சிப்படுத்தும். இத்தகைய விருத்தல் பல வகையான துறைகளுக்கு வழங்கப்படுகிறது. சரி இந்த பதிவில் இந்தியாவில் வழங்கப்படும் 20 முக்கிய விருதுகள் பெயர்கள் பற்றி தெரிந்து கொள்வோம். இது போன்ற விஷயங்களை நாம் தெரிந்து கொள்வதன் மூலம் TNPSC போன்ற பொது தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க 20 முக்கிய இந்திய விருதுகள் பெயர்களை இப்பொழுது நாம் படித்து தெரிந்து கொள்வோம்.

ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது:

விருதுகள் பெயர்கள் – இந்த விருதுக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விருது இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். இந்தி மொழியில் கேல் ரத்னா என்பது விளையாட்டில் இரத்தினக்கல் போன்றவர் என பொருள்படும். முன்னாள் இந்தியப் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி நினைவாக இவ்விருது பெயரிடப்பட்டுள்ளது. முதல் முதலாக இந்த விருதை வங்கியவர்கள் விஸ்வனான் ஆனந்த். இந்த விருது 1992-ஆம் ஆண்டு முதல் வாங்கப்பட்டு வருகிறது.

அர்ஜுனா விருது:

இந்த அர்ஜுனா விருது 1961-ஆம் ஆண்டு முதல் வாங்கப்பட்டு வருகிறது. இந்த விருதும் விளையாட்டு துறையுடன் தொடர்புடையது.

சாகித்திய அகாதமி விருது:

விருதுகள் பெயர்கள் – இந்த சாகித்திய அகாதமி விருது 1954-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதினை மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழுள்ள சாகித்திய நிறுவனம் வழங்குகிறது. இந்த விருது எந்த துறையுடன் தொடர்புடையது என்றால் இலக்கிக்கிய துறையுடன் தொடர்புடையது.

ஞானபீடம் விருது:

இந்த ஞானபீடம் விருது 1961-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது இலக்கியத்துறையின் மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. இந்த விருதை முதன் முதலி பெற்றவர் சங்கர குருப் என்பவர் மலையாள இலக்கியத்திற்க்காக வாங்கிருக்காங்க.

தாதாசாகெப் பால்கே விருது:

விருதுகள் பெயர்கள் – இந்த தாதாசாகெப் பால்கே விருது 1969-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது சினிமா துறைகளில் வழங்கப்படுகிற மிக உயரிய விருது. முதல் முதலாக இந்த விருதை பெற்றவர் தேவிகா ராணி என்ற பெண்மணி ஆவர்.

தயான் சந்த் விருது:

இந்த தயான் சந்த் விருது 2002-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

துரோணாச்சாரியா விருது:

விருதுகள் பெயர்கள் – இந்த விருது 1985-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதும் விளையாட்டு துறையுடன் தொடர்புடைய விருதாகும். அதாவது விளையாயிட்டு துறையில் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படக்கூடிய விருந்துதான் இந்த துரோணாச்சாரியா விருது.

நாரி சக்தி புரஸ்கார் விருது:

இந்த விர்த்து சாதனை படைத்த பெண்களுக்கு வழங்கப்படும் விருதாகும். இந்த விருது 1999-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது:

விருதுகள் பெயர்கள் – சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது என்பது ஆண்டுதோறும் இந்தியாவில் அறிவியல் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கும் இளம் அறிவியலாளர்களுக்கு அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தினால் வழங்கப்படும் விருதாகும். இந்த விருது 1958-ஆம் ஆண்டு முதல் வாங்கப்பட்டு வருகிறது. இந்த விருது CSIR நிறுவனம் வழங்கிவருகிறது.

பிரதம மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார்:

இந்த விருது 1996-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் விருதாகும்.

BC ராய் விருது:

விருதுகள் பெயர்கள் – இந்த BC ராய் விருது 1962-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது மருத்துவ துறை, தத்துவம், அறிவியல் மற்றும் கலை போன்றவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகிறது.

பரம்வீர் சக்ரா விருது:

இந்த பரம்வீர் சக்ரா விருது ராணுவத்தில் கொடுக்கப்படுகின்ற மியா உயரிய விருது. இந்த விருது ஜனவரி 26, 1950 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது எப்போது கொடுப்பார்கள் என்றால் போர்க்களத்தில் சிறப்பாக செயல்படுகிற ராணுவவீரருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும்.

அசோக் சக்ரா விருது:

விருதுகள் பெயர்கள் – இந்த அசோக் சக்ரா விருது 1950-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவும் ராணுவத்தில் வழங்கப்படுகிற விருதாகும்.

காந்தி அமைதி விருது:

இந்த காந்தி அமைதி விருது 1995-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதினை இந்திய அரசு வழங்கிவருகிறது. இந்த விருது எதற்க்காக வழங்கப்படுகிறது என்றால் அகிம்சை வழியில் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றம் ஏற்பட உதவியவர்களுக்கு வழங்கபடுகிறது.

இந்திரா காந்தி அமைதி விருது:

விருதுகள் பெயர்கள் – இந்த இந்திரா காந்தி அமைதி விருது 1986-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதினை இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை வழங்கி வருகிறது.

ராஷ்ட்ரிய கேல் புரோட்சன் விருது:

இந்த விருது 2009-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது விளையாட்டை ஊக்குவிக்கும் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும்.

மௌலானா அபுல்கலாம் ஆசாத் விருது:

விருதுகள் பெயர்கள் – இந்த மௌலானா அபுல்கலாம் ஆசாத் விருது 1956-57 முதல் வழங்கப்படும் விருதாகும். விளையாட்டில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகத்திற்கு குடியரசு தலைவரால் வழங்கப்படும் விருதாகும்.

சங்கீத நாடக அகாதமி விருது:

இந்த விருது 1952-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது இசை, நடனம், நாடகம் துறைகளுக்கு வழங்கப்படும் விருதாகும்.

சங்கீத நாடக அகாதமி பெல்லோசிப் விருது:

விருதுகள் பெயர்கள் – இந்த விருது 1954-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் விருதாகும். இந்த விருதும் இசை, நடனம், நாடகம் துறைகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும்.

மகரிஷி பத்ராயன் வியாஸ் சம்மன் விருது:

இந்து விருது 1958-ஆம் முதல் வழங்கப்படும் விருதாகும். இந்த விருதினை மனிதவள மேப்பட்டு அமைச்சகம் வழங்கும் விருதாகும். இந்த விருது எதற்க்காக வழங்கப்படுகிறது என்றால் சமஸ்கிருதம், பாரசீகம், அரபு, கன்னடம், தெலுங்கு, ஒரியா இந்த மொழிகளில் இளம் வயது கல்வியாளர்களை ஊக்கப்பதும் வகையில் வழங்கப்படும் விருதாகும்.

இந்தியாவின் உயரிய விருது

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil