எந்த தமிழக மாவட்டம் சமய நல்லிணக்கத்தின் பூமி?

Advertisement

சமய நல்லிணக்கத்தின் பூமி எது? | Samaya Nallinakathin Boomi Ethu

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுஅறிவு சார்ந்த பகுதியில் எந்த தமிழக மாவட்டம் சமய நல்லிணக்கத்தின் பூமிஎன்று பார்க்கலாம். அதாவது, இப்பதிவில் எந்த தமிழக மாவட்டம் சமய நல்லிணக்கத்தின் பூமி? என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தனி சிறப்பு பெயர் உள்ளது. உதாரணத்திற்கு தமிழ்நாட்டின் இயற்கை பூமி, இயற்கை விரும்பிகளின் பூமி என்று தேனி அழைக்கப்படுகிறது.

அது போல சமய நல்லிணக்கத்தின் பூமி எது என்று தெரிந்து கொள்வோம். இது போன்ற கேள்விகள் உங்களின் அறிவுத்திறனை சோதித்து பார்ப்பதற்கு உதவியாக இருக்கும். வாங்க எந்த தமிழக மாவட்டம் சமய நல்லிணக்கத்தின் பூமி என்ற கேள்விக்கான விடையை தெரிந்து கொள்வோம்.

எந்த தமிழக மாவட்டம் சமய நல்லிணக்கத்தின் பூமி?

எந்த தமிழக மாவட்டம் சமய நல்லிணக்கத்தின் பூமி

விடை: நாகப்பட்டினம் மாவட்டம் சமய நல்லிணக்கத்தின் பூமி  என்றழைக்கபடுகிறது.

சமய நல்லிணக்கத்தின் பூமி:

  • இந்த மாவட்டம் அக்டோபர் மாதம் 18-ம் தேதி 1991-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இது சோழ மண்டலத்தின் ஒரு அங்கமாக உள்ளது. இது வங்காள விரிகுடா கடலோர பகுதியில் அமைந்துள்ளது.
  • துறைமுகங்களில் ஒன்றான இந்த நகரம் வள்ளிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. பண்டைய புத்த இலக்கியத்தில் படரிதித்த என்ற பெயரிலும் அழைக்கப்பட்டுள்ளது. சோழர்களும், புத்த துறவிகளும் வாழ்ந்தார்கள் என்று இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளது.
  • இலங்கையில் உள்ள புத்த துறவிகள் இந்த நகரத்துடன் அதிக தொடர்பு கொண்டவர்கள் ஆவார்கள். இங்கு சீனரால் கட்டப்பட்ட புத்தர் விஹார் ஒன்று உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள சௌந்தர்ராஜ பெருமாள் வைஷ்ணவ கோவில் மிகவும் சிறப்பு பெற்றது.
  • இந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் முக்கிய தொழில் மீன்பிடித்தல் ஆகும். மீன்களை பாதுகாப்பதற்கு இங்கு ஏரளமான ஐஸ் தொழிற்சாலைகள் உள்ளது.

சுற்றுலா தளங்கள்:

  • டச்சுக்காரர்கள் கட்டிய டேனிஷ் கோட்டை வெளிநாடுகளில் இருந்து பார்க்க வருபவர்களின் மனதை வருடி செல்ல கூடியதாக இருக்கிறது.
  • கோடியக்கரை பறவைகள் சரணாலயம், வனவிலங்கு சரணாலயம், சுதந்திர போராட்டக் களமான வேதாரணியம் போன்றவை மக்கள் சுற்றிபார்ப்பதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது.

மாவட்டங்களின் சிறப்பு பெயர்கள்:

மாவட்டம்  சிறப்பு பெயர்கள் 
சென்னை தென்னிந்தியாவின் கலாச்சார நுழைவாயில், ஆசியாவின் டெட்ராய்ட்
கோடம்பாக்கம் தமிழ்நாட்டின் ஹாலிவுட்
மதுரை கோவில் நகரம், கீழை நாடுகளின் ஏதென்ஸ், தென்னிந்தியாவின் ஏதென்ஸ், தூங்கா நகரம், விழாக்களின் நகரம்
தூத்துக்குடி தமிழ்நாட்டின் நுழைவாயில், முத்து நகரம், உப்பு நகரம், துறைமுக நகரம்
திருநெல்வேலி தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு
காஞ்சிபுரம் கோயில்களின் நகரம், பட்டு நகரம், தமிழ்நாட்டின் எரி மாவட்டம்
வேலூர் கோட்டை நகரம்
திருச்சி / திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை நகரம்
விருதுநகர் தொழில் நகரம்
சிவகாசி குட்டி ஜப்பான், பட்டாசு நகரம்
நாமக்கல் முட்டை நகரம், போக்குவரத்து நகரம்
திண்டுக்கல் தமிழ்நாட்டின் ஹாலந்து, பூட்டு நிலம்
கொடைக்கானல் மலைகளின் இளவரசி 
ஊட்டி மலைகளின் ராணி
நீலகிரி “நீல மலைகள்” நகரம்
ஈரோடு மஞ்சள் சந்தை, மஞ்சள் நகரம், குதிரை சந்தை, ஜவுளி சந்தை, கைத்தறி நகரம்
ராமநாதபுரம் தமிழ்நாட்டின் புனித பூமி
இராமேஸ்வரம் தென்னிந்தியாவின் காசி
விருதுநகர் வியாபார நகரம்
தேனி தமிழ்நாட்டின் இயற்கை பூமி, இயற்கை விரும்பிகளின் பூமி
சிவகங்கை தமிழ்நாட்டின் சரித்திரம் உறையும் பூமி
புதுக்கோட்டை தொல்பொருளியலின் புதையல் நகரம்
திருப்பூர் பின்னலாடை நகரம்
சேலம் மாம்பழ நகரம், புவியலாளர்களின் சொர்க்கம்
ஏற்காடு தென்னிந்தியாவின் அணிகலன், ஏழைகளின் ஊட்டி
கரூர் தமிழ்நாட்டின் நெசவாளர்களின் வீடு
தஞ்சாவூர் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்
அரியலூர் சிமென்ட் நகரம்
கன்னியாகுமரி முக்கடல்கள் சங்கமிக்கும் நகரம்
தருமபுரி காவிரியின் நுழைவாயில்
கடலூர் நிலக்கரி மாவட்டம்
கிருஷ்ணகிரி தமிழகத்தின் பூக்கடை
திருவண்ணாமலை சித்தர் பூமி
விழுப்புரம் கிழக்கு தொடர்ச்சியின் மலையின் தொட்டில்
கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
திருவாரூர் தேரழகு நகரம்
சிவகங்கை சரித்திரம் உரையும் பூமி
திருப்பத்தூர் சந்தன நகரம்
தென்காசி மாவட்டம் எலுமிச்சை நகரம்
ஓசூர் குட்டி இங்கிலாந்து

 

தமிழகத்தின் ஆக்ஸ்போர்ட் எது?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement