பிளாஸ்டிக் இல்லாத மாவட்டம் – First Plastic Free District in Kerala in Tamil
சுற்றுச்சூழலை நாம் தான் பாதுகாக்க வேண்டும். அதாவது நாம் வாழும் பூமியில் நாம் சுவாசிக்கும் காற்று அனைத்தும் சுத்தமாக மாசு இல்லாத காற்றாக இல்லாமல் சுவாசித்தால் தான் அதிக நாட்கள் நோய்நொடிகள் இல்லாமல் வாழ முடியும். அதேபோல் இப்போது அதிகமாக நாம் வாழும் அனைத்தும் இடங்களில் சுத்தமான காற்று வீசுகிறதா என்றால் கண்டிப்பாக கிடையாது. அந்த அளவிற்கு மாசுக்கள் நிறைந்த காற்று தான் அதிகமாக வீசுகிறது. இந்த மாசு காற்று வீசுவதற்கு முக்கிய காரணம் என்றால் என்ன தெரியுமா..? அது பிளாஸ்டிக் தான். இந்த பிளாஸ்டிக் எறிவது அதில் வரும் புகை காற்றில் கலந்து சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்தி விடும். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் பிளாஸ்டிக் இல்லாமல் ஒரு மாவட்டம் உள்ளது. கேட்கவே அதிசயமாக உள்ளாதா..? எனக்கும் அப்படி தான் இருந்தது. அதன் பின்பு அந்த மாவட்டத்தை பற்றி தான் தெரிந்துகொண்டு அதனை உங்களுக்கு தெரிவிக்க போகிறேன். அதற்கு தான் இந்த பதிவு. அந்த மாவட்டத்தை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
First Plastic Free District in Kerala in Tamil:
ஜூன் 5 தேதியை தான் உலக சுற்றுசூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. ஏனென்றால் பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிப்பதை தான் நோக்கமாக கொண்டு இயங்கி வருகிறது. அதேபோல் இந்த நாளில் இயற்கையோடு ஒத்து அதற்கு எந்த வித தீங்கும் விளைவிக்காமல் இருக்கவேண்டும். அதேபோல் இயற்கையை மிகவும் பாதுகாப்பாக அதற்கு தீங்கு விளைவிக்காமல் பாதுகாக்கிறது. அது எந்த மாவட்டம் தெரியுமா அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!
பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்து போராடும் போது இந்தியாவில் பல இடங்கள் இருந்தாலும் அது அனைத்திலும் தனித்து விளங்குகிறது. அது என்ன இடம் என்று உங்களுக்கு தெரியுமா..? அது தான் கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டம். இதற்கு என்ன சிறப்பு என்றால் இந்த ஊரில் பிளாஸ்டிக் இருக்காது.
நம்முடைய ஊரில் அல்லது தெருக்குள் சென்றால் அங்கு குப்பைகள் குப்பை தொட்டிகள் இருக்கும். அதுவும் தெருவுக்கு ஒன்று, கடைகளுக்கு முன்பு என நிறைய இருக்கும். நாம் எங்கு பார்த்தால் அங்கு ஏதாவது ஒரு பிளாஸ்டக் இருந்துகொண்டு தான் உள்ளது அல்லவா..?
உலகின் பரிதாபமான நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா
ஆனால் நம்முடைய கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிராக நல்ல நாடு, நல்ல மண் என்ற முழக்கத்துடன் ஒரு பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இதில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் என்ன பிரச்சனைகள் காணப்படும் என்பது தெரிவிப்பது தான் நோக்கம். அதனை வைத்து பிளாஸ்டிக் பயன்படுத்துவதை குறைப்பது தான் வழக்கம்.
ஆனால் நீண்ட நாட்களாக பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான நீண்ட கால மற்றும் கடினமான போராட்டத்தை முடித்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடை மாவட்டம் எடுத்தது.
முதல் அடியாக கேரி பேக்குகள், பிளாஸ்டிக் பாத்திரங்கள் மற்றும் பாட்டில்கள் போன்ற பிளாஸ்டிக் பயன்பாட்டை முறையாக படிப்படியாக நிறுத்த முடிவு செய்தது. அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக கேரி பைகளுக்கு பதிலாக கைத்தறியில் செய்யப்பட்ட பைகளை அந்த கண்ணூர் மாவட்ட மக்களுக்கு பயன்படுத்த ஊக்குவித்தார்கள்.
பட்டு ஆடைகளுக்கு புகழ்பெற்ற நாடு எது தெரியுமா
இதனை பற்றி மக்களுக்கு எடுத்துரைத்து மக்களை பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். அதேபோல் இதனை குறுகிய காலத்திற்கு மட்டுமில்லாமல் இன்று வரை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக பராமரிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2017 இல், மாவட்டம் இந்தியாவின் முதல் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக கண்ணூர் அறிவிக்கப்பட்டது. கேரளா என்றால் அதிக நீர்நிலைகள் கொண்ட மாநிலமாக தான் தெரியும். அப்படி இருக்கும் போது அதில் குப்பைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இதற்கு என்று தனியாக கண்காணிப்பு உள்ளது. அதையும் மீறி சாலை ஓரம், நீர் நிலைகளின் ஓரம் குப்பைகளை கொட்டுவது தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகில் கடற்கரை இல்லாத நாடு எது தெரியுமா
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |