GK in Tamil
நாம் அனைவருக்கும் நம்மை சுற்றியுள்ள சுற்றுசூழல் மற்றும் அதில் உள்ள முக்கியமாக விஷயங்களை தெரிந்துவைத்துக்கொள்வது முக்கியம். நாம் வாழும் உலகத்தில் சிறந்தவைகளை தெரிந்துகொள்ளும் போது நமக்கு பொது அறிவை விட அதில் உள்ள சுவாரசியங்கள் நமக்கு ஒரு புத்துணர்ச்சியை வழங்கும். அந்த வகையில் இன்று உலகிலுள்ள மிகப்பெரிய பொருட்களை தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. இந்த தகவல்களை போட்டி தேர்வுக்கு தயாராகும் நபர் மட்டும் தெரிந்துவைத்திருந்தால் போதும் என்னும் நிலை மாற வேண்டும். நாம் அனைவரும் நம்மை சுற்றியுள்ள சுவாரசியமாக தகவல்களை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இது நமது அறிவுக்கு தீனியாக இருக்கும். வாருங்கள் இன்றைய பதிவிற்கு செல்லலாம்.
GK Questions with Answers in Tamil:
1. உலகின் மிக உயரமான கட்டிடத்தின் பெயரைக் கூறுங்கள்.
விடை: புர்ஜ் கலீஃபா ( ஐக்கிய அரபு எமிரேட்ஸ் )
2. உலகின் மிக உயரமான மலை சிகரம் எது?
விடை: எவரெஸ்ட் மலை சிகரம்
3. உலகின் மிக உயரமான விலங்கு எது?
விடை: ஒட்டகச்சிவிங்கி
4. உலகின் மிக நீளமான நதியின் பெயரைக் கூறு.
விடை: நைல்
5. உலகின் மிகப்பெரிய மற்றும் ஆழமான கடல் எது?
விடை: பசிபிக் பெருங்கடல்
6. உலகின் மிகச்சிறிய பறவை எது?
விடை: ஹம்மிங் பறவை
7. நமது சூரிய குடும்பத்தில் மிகச்சிறிய கிரகம் எது?
விடை: புதன்
8. உலகில் வேகமாக ஓடக்கூடிய விலங்கு எது?
விடை: சிறுத்தை
9. உலகின் மிகச்சிறிய நாடு எது?
விடை: வாடிகன் நகரம்
10. உலகின் மிகப்பெரிய கடல் விலங்கு எது?
விடை: நீல திமிங்கிலம்
11. உலகிலேயே வேகமான பறவை எது?
விடை: பெரேக்ரின் பால்கன்
12. உலகின் மிகச்சிறிய கண்டம் எது?
விடை: ஆஸ்திரேலியா
13. உலகின் மிக நீளமான ரயில் நடைமேடை எது?
விடை: கோரக்பூர் (உத்தர பிரதேசம், இந்தியா)
14. உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
விடை: ஏஞ்சல் நீர்வீழ்ச்சி (வெனிசுலா, தென் அமெரிக்கா)
15. உலகின் மிக உயரமான நினைவுச்சின்னம் எது?
விடை: கேட்வே ஆர்ச் (அமெரிக்கா)
16. உலகின் மிகப்பெரிய நாடு எது ?
விடை: ரஷ்யா
17. உலகின் மிகப்பெரிய தீவு எது ?
விடை: கிரீன்லாந்து
18. உலகின் மிக உயரமான நகரம் எது?
விடை: வான்சூவான்
19. உலகிலேயே பெரிய பாலைவனம் யாது?
விடை: சஹாராப்பாலைவனம்
20. உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது?
விடை: தென்சீனக்கடல்
21. உலகிலேயே மிக ஆழமான ஏரி எது?
விடை: பைக்கால் ஏரி
22. உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு எது?
விடை: இந்தியா
23. கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது?
விடை: நெதர்லாந்து
24. உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் எது?
விடை: அலாஸ்கா
25. உலகிலேயே மிகப்பெரிய பூ எது?
விடை: ரவல்சியாஆர்ணல்டி
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |