ஐ.ஏ.எஸ் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் | IAS Question And Answer in Tamil

IAS Questions And Answers in Tamil

ஐ.ஏ.எஸ் தேர்வில் கேட்கப்படும் கடினமான கேள்விகள் | IAS Questions And Answers in Tamil

IAS Questions And Answers in Tamil: வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் ஐ.ஏ.எஸ் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளின் தொகுப்பை பார்க்கலாம். ஐ.ஏ.எஸ் தேர்வை பொறுத்தவரை அதில் கேட்கப்படும் கேள்விகள் பொது அறிவு சார்ந்த விஷயமாகவும், நம்முடைய மனநிலையை சோதிக்கும் கேள்விகளாக தான் அதிகமாக கேட்கப்பட்டு வருகின்றன. ஐ.ஏ.எஸ் தேர்விற்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் நாம் இந்த தொகுப்பில் ஐ.ஏ.எஸ் தேர்வில் கேட்கப்படும் கடினமான கேள்விகளை பற்றி பார்க்கலாம் வாங்க.

IAS Interview Questions in Tamil:

  1. மார்க் ஒரு பேனாவையும், ஒரு பென்சிலையும் ரூ.110/- வாங்கினார். பேனாவின் விலை பென்சிலை விட ரூ.100/- அதிகம் எனில், பேனாவின் விலை என்ன?

விடை: பேனாவின் விலை – ரூ.105/-, பென்சிலின் விலை – ரூ.5/-

2. திரு மற்றும் திருமதி ஜானுக்கு ஆறு மகள்கள் உள்ளனர், ஒவ்வொரு மகளுக்கும் ஒரு சகோதரர் உள்ளனர் எனில் ஜான் குடும்பத்தில் மொத்தம் எத்தனை பேர் உள்ளனர்.

விடை: ஜான் குடும்பத்தில் 9 பேர் உள்ளனர், ஒவ்வொரு மகளுக்கும் ஒரே சகோதரர் இருப்பதால் ஆறு பெண்கள், ஒரு பையன், திரு மற்றும் திருமதி ஜான் உள்ளனர்.

3. நீங்கள் ஒரு இருண்ட அறையில் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள், நீங்கள் எப்படி அந்த இருண்ட அறையில் இருந்து வெளியேறுவீர்கள்.

விடை:  கற்பனை செய்வதை நிறுத்துங்கள்.

IAS Question And Answer in Tamil – கடினமான IAS கேள்விகள்:

4. இரும்பு ஆணியை சாப்பிட்டு எந்த விலங்கால் ஜீரணம் செய்ய முடியும்?

விடை:  முதலை. முதலைகளில் அதிக அமிலத்தன்மையும், வலுவான செரிமான சாறுகள் உள்ளன. இவை இரும்பு ஆணிகள் மட்டும் இன்றி பிற கடினமான பொருட்களையும் சாப்பிட முடியும்.

5. எந்த மலை ஒவ்வொரு நாளும் அதன் நிறத்தை மாற்றுகிறது?

விடை: ஐயர்ஸ் ராக். ஆஸ்திரேலியாவின் வடக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள ஐயர்ஸ் பாறை சூரியனின் பிரதிபலிப்புக்கு ஏற்றவாறு அதன் நிறத்தை மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறமாக மாற்றிக்கொள்ளும்.

6. மனித தலையில் எத்தனை முடிகள் உள்ளன?

விடை: 90,000- 1,50,000 தலைமுடிகள்.

  • பெண்கள் தலையில் 1,50,000 (சராசரியாக)
  • ஆண்கள் தலையில் 90,000 (சராசரியாக)

IAS Interview Questions in Tamil – ஐஏஎஸ் கேள்விகள்:

7. எந்த விலங்குக்கு நீல நிறம் ரத்தம் உள்ளது

விடை: ஆக்டொபஸ். ஆக்டொபஸ் உடலில் நீல ரத்தம் உள்ளது. ஆழமான பெருங்கடல்களில் ஆக்டொபஸ் உயிர் வாழ்வதற்காக உருவாகும் ரத்தம் இரும்பினால் உருவாகாமல் தாமிரத்தால் உருவாகின்றன, ஆதலால் இரத்தம் நீல நிறமாக உள்ளது.

8. முட்டை மற்றும் பால் இரண்டையும் தருகின்ற ஒரே விலங்கு எது?

விடை: பிளாட்டிபஸ், ஆனால் இது கொடுக்க கூடிய பால் மற்றும் முட்டை விஷம் என்பதால் இதனை சாப்பிட முடியாது.

9. மனிதனுக்கு இணையான அறிவாற்றல் கொண்ட ஒரே விலங்கு எது?

விடை: டால்பின்

10. தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் தூங்கக்கூடிய விலங்கு எது?

விடை: நத்தை

ஐஏஎஸ் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் – IAS Iinterview Questions And Answers in Tamil:

11. கோபம் வந்தால் மட்டுமே தனது வாலை ஆட்டும் விலங்கு எது?

விடை: பூனை

12. ஒரு ஆண்டில் 800 குட்டிகளை போடும் ஆற்றலுடையது எது?

விடை: எலி

13. கொம்புகளை ஆண்டிற்கு ஒரு முறை விழுந்து முளைக்க வைப்பது எது?

விடை: மான்

IAS Questions And Answers in Tamil – ஐஏஎஸ் கேள்விகள்:

14. தனது பின்னங்கால்களால் சுவையை அறிகின்ற பூச்சி எது?

விடை: வண்ணத்து பூச்சி (Butter Fly)

15. மூக்கில் பல்லை உடைய விலங்கு எது?

விடை: முதலை

16. மூளையை எடுத்தாலும் உயிருடன் வாழும் விலங்கு எது?

விடை: ஆமை

17. கோபம் வந்தால் கொட்டாவி விடும் விலங்கு எது?

விடை: நீர் யானை

ஐ.ஏ.எஸ் கேள்வி பதில்கள் – IAS Questions And Answers in Tamil:

18. ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இரு வேறு காட்சிகளை காணும் விலங்கு எது?

விடை: ஆந்தை

19. பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி அளிக்காத நாடு எது?

விடை: சவுதி அரேபியா

20. இந்தியாவில் மரண தண்டனையை யாரால் மன்னித்து ரத்து செய்ய முடியும்?

விடை: பிரிவு 72-ன் படி இந்திய ஜனாதிபதி மரண தண்டனையை மன்னித்து ரத்து செய்யலாம்.

TNPSC பொது அறிவு | பிரித்து எழுதுக
TNPSC General Knowledge Questions And Answers

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil