கோபம் வந்தால் கொட்டாவி விடும் விலங்கு எது
மனிதர்களாக இருந்தாலும் சரி விலங்குகளாக இருந்தாலும் சரி அனைவருக்கும் கோபம் வரும். இது உணர்ச்சியின் வெளிப்பாடு. மனிதர்களுக்கு கோபம் வந்தால் குரலை உயர்த்தி பேசுவோம், பொருட்களை உடைப்போம் இதுபோன்ற பல உணர்ச்சிகளை வெளிப்படுத்துவோம். ஆனால் விலங்குகளுக்கு கோபம் வந்தால் வித்தியாசமான வகையில் அவற்றின் கோபத்தை வெளிப்படுத்தும். அதாவது ஒவ்வொரு விலங்கும் ஒவ்வொரு செயலின் மூலம் அவற்றின் கோபத்தை வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில் இன்றைய பதிவில் கோபம் வந்தால் கொட்டாவி விடக்கூடிய விலங்கு ஒன்று உள்ளது. அதனை பற்றித்தான் இப்பதிவில் பின்வருமாறு பார்க்கப்போகிறோம்.
கோபம் வந்தால் வாலை மட்டும் ஆட்டும் விலங்கு எது தெரியுமா..
Which Animal Yawns When Angry in Tamil:
கோபம் வந்தால் கொட்டாவி விடும் விலங்கு:
கோபம் வந்தால் கொட்டாவி விடும் விலங்கு நீர்யானை ஆகும். நீர் யானை அவற்றின் கோபத்தை கொட்டாவி விட்டு வெளிப்படுத்துகிறது. இது ஒரு தாவர உண்ணியாகும். இது பார்ப்பதற்கு அமைதியாக இருக்கும். ஆனால் கோபம் வந்தால் கொட்டாவி விட்டு தனது கோபத்தை வெளிப்படுத்துகிறது.நீர் யானை ஆப்ரிக்காவை சேர்ந்து பாலூட்டி வகையாகும். இவை கூட்டமாக வாழும் உயிரினமாகும். ஒரு கூட்டத்தில் 40 நீர்யானைகள் வரை காணப்படும். இவை சுமார் 40 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
கோபம் குறைய என்ன செய்ய வேண்டும்
உடலமைப்பு:
நீர்யானையின், உடல் நீளம் 3.5 மீ வரை உள்ளது. மேலும் இது 1500 கிலோகிராம் – 3200 கிலோகிராம் எடையுடையது. இது பிறக்கும் போது 45 கிலோகிராம் எடையுடன் தான் பிறக்கிறது.
பெண் நீர்யானைகள் ஆண் நீர் யானைகளை விட அதிக சிறிய உருவத்தில் இருக்கும். நீர்யானைகள் தானாக மனிதர்களை தாக்காது. மனிதர்கள் அதன் எல்லைக்குள் சென்றால் மட்டுமே நீர்யானை தாக்கக்கூடிய குணம் கொண்டது.
இது தண்ணீரில் இனப்பெருக்கம் செய்து குட்டிகளை ஈன்றக் கூடியது. இதனால் 5 நிமிடம் வரை தண்ணீருக்குள் மூச்சை அடைக்க முடியும்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |