மசூதி இல்லாத நாடு எது
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நம்மில் பலருக்கும் தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதை எப்படி தெரிந்து கொள்வது என்று நம்மில் பலருக்கும் கேள்வி இருக்கும். அதுபோல் நம் நாட்டில் அதிசயமான பல விஷயங்கள் இருக்கின்றன. அதை தெரிந்து கொள்ள அனைவருக்குமே ஆர்வம் இருக்கும். அதனால் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்று மசூதி, தேவாலயம் இல்லாத நாடு எது என்று தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
முஸ்லீம் இருந்தும் மசூதி இல்லாத நாடு எது..?
மசூதி இல்லாத நாடு எது என்று யோசிப்பீர்கள். அதுபோல மசூதி இல்லையென்றால் முஸ்லீம்களும் இருக்கமாட்டார்கள் என்று நினைக்காதீர்கள். இந்த ஊரில் முஸ்லீம்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். இன்னொரு விஷயம் உங்களுக்கு தெரியுமா இந்த நாட்டில் தேவாலயமும் இல்லையாம். அதனால் உடனே இங்கு கிறிஸ்தவர்கள் இல்லையென்றும் நினைத்து விட வேண்டும்.
இந்த நாட்டில் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால் மசூதியும் தேவாலயமும் இல்லை. இதற்கு என்ன காரணம், அந்த நாடு எங்கிருக்கிறது என்று இங்கு காண்போம்.
பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் அந்த நாட்டு மக்களின் அனைத்து நம்பிக்கைகளுக்கும் மத வழிபாட்டு இடங்கள் இருக்கும். ஆனால் ஒரு நாட்டில் மட்டும் இல்லை. அதுவும் இறையாண்மையை போற்றும் நம் நாட்டிற்கு அருகிலேயே இருக்கிறது. அந்த சிறிய நாட்டின் பெயர் தான் பூட்டான்.
1 முஸ்லீம் கூட இல்லாத நாடா.. அது எங்க இருக்குனு தெரியுமா |
மசூதி, தேவாலயம் கட்ட ஏன் அனுமதி இல்லை..?
பூட்டான் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 7.5 லட்சத்தில் 84.3 சதவீத மக்கள் பௌத்த மதத்தை சார்ந்தவர்களாக இருப்பதால், புத்த கோவில்களும் மடாலயங்களும் ஏராளமாக உள்ளன.
அதுபோல 2 ஆவது இடத்தில் இந்து மக்கள் தொகை 11.3 சதவீதமாக இருக்கிறது. அதனால் அவர்களுக்கு அங்கு கோவில்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களும் உள்ளன. ஆனால் பூட்டானில் முஸ்லிம்களின் மக்கள்தொகை மொத்த எண்ணிகையில் சுமார் 01 சதவீதமாகும். அதாவது எண்ணிக்கை அளவில் பார்த்தால் சுமார் 5,000 முதல் 7,000 முஸ்லீம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால் இந்த முஸ்லீம் மக்களுக்கு தொழுகை செய்ய அங்கு மசூதிகளே கிடையாது. அவர்களும் மசூதி கட்ட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் அரசு அனுமதி வழங்கவில்லை.
ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ள நாடு எது தெரியுமா |
அதுபோலவே கிறிஸ்தவர்கள் சுமார் 30,000 மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இருந்தாலும் அவர்களுக்கும் பூட்டான் நாட்டில் 1 தேவாலயங்கள் கூட இல்லை. பூட்டான் அரசாங்கம் அவர்களையும் தேவாலயம் கட்ட அனுமதிக்கவில்லை.
பூட்டான் நாடு நிச்சயமாக மத ரீதியாக அனைவருக்கும் சுதந்திரம் அளிக்கிறது. ஆனால், பிற மதங்களின் வழிபாட்டுத் தலங்களை கட்ட இதுவரை அனுமதிக்காமல் தான் இருந்து வருகிறது என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |