Most Populous State of India
இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். தினமும் இந்த பதிவின் மூலம் ஒரு பாயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் எது என்றால் சீனா முதலிடத்திலும் நம் இந்தியா 2 ஆவது இடத்திலும் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது என்று உங்களுக்கு தெரியுமா..? பதில் தெரியாதவர்கள் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்.
உலகில் அதிக மருத்துவர்கள் உள்ள நாடு எது..? |
அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது..?
நம் இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது தெரியுமா..?
விடை: உத்தரப்பிரதேசம்.
இந்தியா என்பது 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் என்று மொத்தம் 36 எண்களைக் கொண்ட ஒரு கூட்டாட்சி ஒன்றியமாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 142000000 அதாவது, 1420 மில்லியன் அல்லது 142 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம். இந்தியாவில் முதல் 5 மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகும்.இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 பால் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது..?
இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம் மற்றும் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் சிக்கிம் என்று கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேசம் இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்றாகும். லக்னோ இந்த மாநிலத்தின் தலைநகரமாக இருக்கிறது. அலகாபாத், கான்பூர், வாரணாசி, ஆக்ரா ஆகியவை உத்திர பிரதேசத்தின் முக்கிய நகரங்களாக இருக்கிறது.
இந்தி மற்றும் உருது இம்மாநிலத்தில் பெரும்பாலும் பேசப்படும் மொழிகள் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவின் ஆறு பிரதமர்களான ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வி. பி. சிங், சந்திரசேகர், சரண் சிங், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் இம்மாநிலத்தில் பிறந்தவர்கள் ஆவர்.
இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 இந்தியாவில் தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் எது தெரியுமா..!
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |