உலகில் அதிக மருத்துவர்கள் உள்ள நாடு எது..?

Advertisement

அதிக மருத்துவர்கள் உள்ள நாடு எது? | Which Country Has the Most Doctors in The World in Tamil 

தினமும் ஒவ்வொரு விதமான பொது அறிவு கேள்விகளை படித்து தெரிந்து கொண்டு தான் வருகிறோம்..! இன்று இந்த பதிவின் வாயிலாக அதிக மருத்துவர் உள்ள நாடு எது என்பதை தெரிந்து கொள்ள போகிறோம்..! அதிக மருத்துவர் உள்ள நாடு என்றால் அது கண்டிப்பாக இந்தியா இருக்காது. காரணம், இங்கு படித்துவிட்டு தான் வெளி நாடுகளுக்கு சேவை செய்ய போய் விடுகிறோம். என்ன  செய்வது அதை விடுங்க இன்று அதிக மருத்துவர் உள்ள நாடு எது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..!

அதிக மருத்துவர்கள் உள்ள நாடு எது?

உலகில் அதிக மருத்துவர் உள்ள நாடு எது தெரியுமா..?

பதில்:  ரஷ்யா  

ரஷ்யாவின் சிறப்பு:

உலகில் மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்டிருக்கும் ரஷ்யா 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து தனி நாடாக உருவானது.

ரஷ்யா மொழி ஆட்சி மொழியாக இருந்தாலும் அங்கு வாழும்  மக்கள் 27 வகையான மொழிகளை பேசி வருகிறார்கள்.

உலகில் மிக நீண்ட ரயில் பாதையை கொண்ட நாடு ரஷ்யா தான். மொத்தம் 9,220 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதனுடைய பயண நேரம் 152 மணி 27 நிமிடங்கள் ஆகும்.

இங்கு 150 மில்லயனுக்கும் மேலாக மக்கள் வாழ்தாலும் இங்கு ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக உள்ளார்கள்.

உலகில் அதிக பணக்காரர் வாழும் நாடும் ரஷ்யா தான்.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 பால் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது..?

உலகில் இரண்டாவது எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு ரஷ்யா தான். ஒரு நாளுக்கு 95 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கிறது.

மாஸ்கோவில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் தான் உலகில் மிக விரைவான போக்குவரத்து வசதியாகும். இங்கு ஒவ்வொரு 90 வினாடிகளுக்கு ரயில்கள் திட்டமிடப்படுகின்றன. இந்த ரயிலில் தான் 90 லட்சம் மக்கள் நீண்ட பயணத்தை மேற்கொள்கின்றனர்.

ரசியாவின் Saint Petersburg தான் உலகின் மிக ஆழமான ரயில் சுரங்க பாதை ஆகும். இது 100 மீட்டர் ஆழம் கொண்டது.

உலகில் அதிகம் யுரேனியம் வைத்திருக்கும் நாடு ரஷ்யா தான்.

ரஷியாவில் அமைத்திருக்கும் Lake Baikal என்ற ஏரி தான் உலகிலேயே மிக தூய்மையான நீர் அமைப்பு கொண்டிருக்கும் ஏரி ஆகும்.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 இந்தியாவில் தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் எது தெரியுமா..!

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement