ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாத உணவு எது.?

Advertisement

Which is The Only Food That Does Not Spoil  | Kettu Pogatha Unavu 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கெட்டு போகாத ஒரே உணவு பொருள் (What is The Only Food That Doesn’t Spoil in Tamil) எது என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். உயிருள்ள அனைத்திற்கும் உணவு என்பது மிகவும் அவசியம். அப்படி நாம் உண்ணும் உணவுகளில் சில உணவுகள் கெட்டுபோகாமல் சில காலங்கள் வரை இருக்கும் என்பது அனைவருக்கு தெரியும். ஆனால் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாத உணவு ஒன்று உள்ளது என்பது யாருக்காவது தெரியுமா.? அப்படி தெரிந்திருந்தால் மிகவும் நல்லது. தெரியாதவர்கள் இப்பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள். அது என்ன உணவு என்று தானே யோசித்து கொண்டிருக்கிறீர்கள். அதற்கான பதிலை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

What is The Only Food That Doesn’t Spoil in Tamil:

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாத ஒரே உணவு தேன் ஆகும். தேனில் இயற்கையாகவே அதிக அளவில் அமிலத்தன்மை உள்ளது. அதாவது தோராயமாக 3 pH அல்லது 4.5 pH அளவில் அமிலம் உள்ளது. இந்த அமிலம் தேனில் எந்தவொரு கெட்ட பாக்டீரியாக்களையும் வளரவிடாமல் அழித்துவிடும். இதன் காரணமாகவே தேன் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போவதில்லை.

 which is the only food that does not spoil in tamil

தேனில் குறைந்த நீர் உள்ளடக்கம் மற்றும் அதிக அமிலத்தன்மை உள்ளதால் தேன் கெட்டு போகாமல் இருக்கிறது. முக்கியமாக  இது பாக்டீரியா வளர்ச்சிக்கு பொருத்தமற்ற சூழலை உருவாக்குகிறது. தேனில் குறைந்த நீர் உள்ளடக்கம் இருப்பதால், அது பாக்டீரியாக்களுக்கு ஏற்றதாக இல்லை. அதுமட்டுமில்லாமல் தேனில் உள்ள அதிக சர்க்கரை உள்ளடக்கம் பாக்டீரியாக்கள் வளர்வதையும் தடுக்கிறது. இதனால் தேன் கெட்டு போகாமல் இருக்கிறது. ஆகவே தேன் மட்டுமே என்றென்றும் நீடிக்கும், ஒருபோதும் கெட்டுப்போகாத ஒரே உணவு. தேன் கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளுக்கு மேலாக வைத்து சோதித்தத்தில் தேன் கெட்டுப்போகவில்லை.

சாவே இல்லாத உயிரினம் எதுவென்று உங்களுக்கு தெரியுமா..

தேன் பற்றிய சில விவரங்கள்:

தேன் என்பது மனித இனத்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உட்கொள்ளப்பட்டு வரும் பழமையான சிறந்த உணவு பொருளாகும். தேனை உற்பத்தி செய்யக்கூடிய தேனியானது பூமியில் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக உயிர் வாழ்கின்றன.

தேன் இயற்கையாகவே நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மை கொண்டது. இதனால் இது மருத்துவ குணமிக்க பொருளாகவும் கருதப்படுகிறது. தேன் பல்வேறு பயன்பாடுகளை உடையது. தேனில் பேரீச்சம்பழத்தை ஊறவைத்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடலிற்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தேன் எவ்வாறு பெறப்படுகிறது.?

 what is the only food that doesn't spoil

பூக்களில் இனிப்பான வழுவழுப்பான நிலையில் திரவங்கள் சுரக்கும். இத்திரவங்களிலிருந்து தேனீக்கள் தேனை பெற்று தேன் கூட்டில் சேகரிக்கின்றன.

கோபம் வந்தால் கொட்டாவி விடும் விலங்கு எது தெரியுமா..

தேனில் உள்ள சத்துக்கள்:

  • நீர்ச்சத்து
  • இரும்புச்சத்து
  • கால்சியம்
  • மெக்னீசியம்
  • பாஸ்பரஸ்
  • பொட்டாசியம்
  • சோடியம்
  • கொழுப்பு 
  • துத்தநாகம் 

தேன் பயன்படுத்துபவரா நீங்கள்.. அப்போது இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா..

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement