Who Invented the Pen in Tamil
நாம் அனைவருமே தினமும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் இருக்கும். அப்படி ஆர்வம் இருப்பதில் ஏதும் தவறு இல்லை. நமக்கு தெரியாத பல தகவல்கள் இந்த உலகில் உள்ளது. அவ்வாறு நமக்கு தெரியாத அனைத்து தகவல்களையும் நாம் அறிந்து கொள்வதற்கு நமது ஆர்வமாக இருக்கும். அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு பயனடைந்து வருகின்றோம்.
அதே போல் இந்த பதிவிலும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொள்ள போகின்றோம். சரி உங்களுக்கு நாம் அனைவருமே எழுதுவதற்கு பயன்படுத்தும் பேனாவை கண்டுபிடித்தவர் யார் என்று தெரியுமா.? தெரியவில்லை என்றால் இந்த பதிவை இறுதி வரை படித்து அது யார் என்று அறிந்து கொள்ளுங்கள்.
வேதியியலின் தந்தை யார் தெரியுமா ஐயா உங்கள தான் இத்தனை நாளா தேடிகிட்டு இருந்தோம்
பேனாவை கண்டுபிடித்தவர் யார்..?
இந்நேரத்துக்கு பேனாவை கண்டுபிடித்தவர் யாராக இருக்கும் என்று சிந்தனை செய்ய ஆரம்பித்திருப்பீர்கள். அதிகம் சிந்தனை செய்ய வேண்டாம். இன்றைய காலகட்டத்தில் நாம் எழுதுவதற்கு பயன்படும் பேனாவை கண்டுபிடித்தவர் பார்தோலோமிவ் ஃபோல்ச் ஆவார்.
ஆனால் பண்டைய கால எகிப்தியர்கள் பாப்பிரஸ் சுருள்களில் எழுத்தை உருவாக்கினர், அப்போது எழுத்தாளர்கள் மெல்லிய நாணல் தூரிகைகள் அல்லது ஜுன்கஸ் மரிடிமஸ் அல்லது கடல் ரஷ் ஆகியவற்றிலிருந்து நாணல் பேனாக்களைப் பயன்படுத்தினார்கள்.
அதன் பிறகு காலப்போக்கில் அவர்கள் கண்டுபிடித்த எழுத்துக்கோல் பல வகையான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு. 1809 ஆம் ஆண்டில், பார்தோலோமிவ் ஃபோல்ச் இங்கிலாந்தில் மை நீர்த்தேக்கத்துடன் கூடிய பேனாவிற்காக காப்புரிமை பெற்றார்.
தற்பொழுது பால்பாயிண்ட் பேனாக்கள் , ரோலர்பால் பேனாக்கள், ஃபவுண்டன் பேனாக்கள் மற்றும் ஃபீல்ட் அல்லது செராமிக் டிப் பேனாக்கள் ஆகியவை காகிதங்களில் எழுதுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
அதேபோல் ராபிடோகிராஃப் போன்ற தொழில்நுட்ப பேனாக்களும் உள்ளது. அதேபோல் இந்த நவீன பேனாக்கள் அனைத்தும் உள் மை நீர்த்தேக்கங்களைக் கொண்டிருக்கின்றன, அவை எழுதும் போது மையில் தோய்க்கப்பட வேண்டிய அவசியமில்லை.
SIM Card-யை முதன் முதலில் உருவாக்கியவர் யார் தெரியுமா
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |