Who is the Father of Chemistry in Tamil
இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனத்திருப்தி இருக்கும். அப்படி என்ன பயனுள்ள தகவல் என்று தானே நீங்கள் சிந்தனை செய்கிறர்கள். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் முதல் பள்ளி படிப்பை முடித்து விட்டு உயர் கல்வி படிக்கின்ற மாணவர்கள் முதல் அனைவருக்குமே மிகவும் மிகவும் பிடிக்காத மற்றும் மிகவும் கடினமாக உள்ள ஒரு பாடம் என்றால் அது வேதியியல் பாடம் தான். அதனை படிக்கும் பொழுதெல்லாம் இந்த வேதியியலை யார் தான் கண்டுபிடித்ததோ என்று திட்டிக்கொண்டே படிப்போம். அப்படி நம்மிடம் ப லமுறை திட்டு வாங்கிய வேதியியலை கண்டுபிடித்தவர் அல்லது வேதியியலின் தந்தை யார் என்பதை தான் இன்றைய பதிவில் பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவர் யார் என்று அறிந்து கொள்ளுங்கள்.
வேதியியலின் தந்தை யார்..?
நாம் பள்ளிகளில் உயர் வகுப்பு படிக்கும் பொழுது நாம் அனைவருமே மிகவும் பிடிக்காத மற்றும் மிகவும் கடினமாக உள்ள ஒரு பாடம் என்றால் வேதியியல் பாடம் தான். இதில் உள்ள பார்முலா தான் ரொம்ப கஷ்டமாக இருக்கும். அதனை எழுதினால் தான் மார்க் வரும் என்று கூறுவார்கள். அதற்காக இதனை புரிந்து கொள்ளாமல் மொட்டை மனப்பாடம் செய்து கொள்வோம். அப்படி படிக்கும் பொழுதெல்லாம் இந்த வேதியியலை யார் தான் கண்டுபிடித்ததோ அவர் மட்டும் ஏன் கையில் கிடைத்தால் அவ்வளவு தான் என்று திட்டிக்கொண்டே படிப்போம்.
அப்படி நம்மிடம் பலமுறை திட்டு வாங்கிய வேதியியலை கண்டுபிடித்தவர் அல்லது வேதியியலின் தந்தை யார் என்பதை தெரிந்து கோல் வேண்டும் என்ற ஆவல் இருந்தால் இந்த பதிவை முழுமையாக படித்து அறிந்து கொள்ளுங்கள்.
SIM Card-யை முதன் முதலில் உருவாக்கியவர் யார் தெரியுமா
வேதியியலின் தந்தை யார் என்றால் அந்துவான் இலவாசியேஆவார். இவர் தான் வேதியியல் பகுதியில் பல குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளை செய்தார். மேலும் இவர் தான் தண்ணீர் ஹைட்ரஜன்-ஆக்ஸிஜன் கலவை என கண்டறிந்தார்.இவர் கந்தகம் ஒரு தனிமம் என்றும், வைரம் ஒரு வகை கார்பன் என்றும் அவர் கண்டுபிடித்தார். மேலும் இவர் வேதியியல் பெயரிடலின் முதல் நவீன முறையை உருவாக்கினார் மற்றும் வேதியியலில் அதிக அளவு பாதுகாப்பு விதியையும் உருவாக்கினார்.
அதே போல் இவர் தான் வேதியியல் சேர்மங்களுக்கு சமகாலப் பெயரிடும் முறையைக் கண்டுபிடித்தார். அதனால் தான் இவர் “நவீன வேதியியலின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார்.
அந்துவான் இலவாசியே பற்றிய தகவல்கள்:
இலவாசியே 1743 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 26 ஆம் தேதி பாரிசில் பிறந்தார் .ஐந்து வயதிலேயே தனது தாயாரை இழந்தார். மாசாரின் கல்லூரியில் 1754 முதல் 1761 வரை வேதியல், தாவரவியலும், வானவியலும், கணிதமும் பயின்றார். தனது 25 ஆம் வயதில் பிரான்சிய அறிவியல் கழகத்தின் உறுப்பினரானார். 1769-ல், அவர் பிரான்சின் முதல் புவியியல் வரைபடத்தை உருவாக்குவதில் பங்காற்றினார். 1771 ல், தனது 28 ஆவது வயதில், 13-வயதான மேரி-அன்னே என்பவரை திருமணம் செய்தார். காலப்போக்கில் அவர் தனது கணவருக்கு பல வகையிலும் உறுதுணையாக இருந்தார்.
கார்பன் டை ஆக்சைடை கண்டுபிடித்தவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா
School-ஐ கண்டுபிடித்தவர் இவர் தானா ஐயா உங்கள தான் இத்தனை நாளா தேடிக்கிட்டு இருந்தோம்
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |