ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம்

Advertisement

ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம்

உடலில் இருக்கும் கழிவை வெளியேற்றும் சிறுநீர் பிரிதல் நாள் ஒன்றுக்கு இத்தனை முறை, இவ்வளவு அளவு வரை வெளியேற வேண்டும். நீங்கள் கடுக்கும் தண்ணீருக்கு ஏற்ற சிறுநீர்கழித்தால் பிரச்சனையில்லை. அதுவே அதிகமாக கழித்தால் கவனிப்பது அவசியமானது.

அதிகமாக சிறுநீர் கழித்தால் உடலில் இருக்கும் கழிவுகள் தானே வெளியேறுகிறது என்று அலட்சியம் கூடாது. அவை நோய் தாக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம். அதனால் ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிப்பது நல்லது என்று அறிந்து கொள்வோம் வாங்க..

வயதானவர்களுக்கான டயபர் அளவு

ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம்:

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்பதை சிறுநீர் கழிப்பதை வைத்து அறிந்து கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு மனிதன் சராசரியாக 4 முதல் 10 முறை வரைக்கும் கழிப்பது இயல்பானது. நம்முடைய சிறுநீர் பையானது 2 கப் சிறுநீரை தேக்கி வைத்து கொள்ளும் திறன் கொண்டது. அதனால் நீங்கள் 3 முதல் 5 மணி நேரம் வரைக்கும் சிறுநீரை தேக்கி வைத்து கொள்ளலாம்.

சில பேர் இரவு தூங்கும் போது சிறுநீர் கழிக்க எந்திருப்பார்கள். இதை நீங்கள் ஒரு முறை எழுந்திருத்தல் இயல்பானது, அதுவே 2 முறைக்கு மேல் எழுந்தரித்தால் உங்களது டபிள் ஏதும் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

யார் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தெரியுமா.?

ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம்

நீரிழிவு நோய், கர்ப்ப காலம், சிறுநீரக பாதை நோய்த்தொற்று மற்றும் புரோஸ் டேட் பிரச்சினைகள் போன்றவை அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சினைக்கு காரணமாக அமைகிறது.

சில பேருக்கு இரவு தூக்கத்தின் நடுவே அவசரமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும். இதை சிறுநீர்ப்பை நோக்டூரியா எனப்படும் நிலை என்று கூறுகின்றனர். இது இயல்பானது அல்ல. சில நேரங்களில் இவை தீவிரமான நிலையை குறிப்பதாக இருக்கலாம்.

மருத்துவரை எப்போது அணுக வேண்டும்:

சுறுநீர் கழிக்கும் போது வலியோ, எரிச்சலோ, இரத்தம் வந்தாலோ மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும், மேலும் எப்போதும் கழிக்கும் சிறுநீர் அளவை விட அதிகமாக கழித்தாலும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

ஒரு மாசத்துக்கு டீ, காபிக்கு நோ சொல்லுங்க என்ன நடக்குதுன்னு பாப்பும்..

இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Learn 
Advertisement