கடுக்காய் பொடியை பயன்படுத்துவதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?

Advertisement

Kadukkai Podi Benefits in Tamil

பொதுவாக நமது முன்னோர்கள் பல ஆண்டுகளுக்கு மிக மிக ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள். அதற்கு காரணம் அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையும் தான். மேலும் அவர்களுக்கு பலவகையான மூலிகை மருத்துவங்களும் தெரிந்திருந்தது. அப்படி நமது முன்னோர்களுக்கு தெரிந்திருந்த பல மூலிகை மருத்துவம் இன்றைய சூழலில் அழிந்து கொண்டு வருகின்றது என்றே கூற வேண்டும்.

அப்படி நமது முன்னோர்களால் பலவகையான மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கடுக்காய் பொடியின் மருத்துவ குணங்கள் பற்றி நம்மில் பலருக்கும் சரியாகவும் முழுமையாகவும் தெரியாது என்பதே உண்மை. அதனால் தான் இன்றைய பதிவில் கடுக்காய் பொடியின் மருத்துவ குணங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க..

தினமும் ஒரு கிளாஸ் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா

Kadukkai Powder Benefits in Tamil:

Kadukkai Powder Benefits in Tamil

நாம் அனைவருமே கடுக்காய் பொடி பார்த்தும் சில நேரங்களில் பயன்படுத்தியும் இருப்போம். ஆனால் அதனை பயன்படுத்துவதால் நமக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது.

அதனால் கடுக்காய் பொடியை பயன்படுத்துவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

இரத்தத்தை சுத்திகரிக்க:

இரத்தம் சுத்தமாக இருக்க

பொதுவாக துவர்ப்பு சுவை நிறைந்த உணவுகள் இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றலயும், இரத்தத்தை உற்பத்தி செய்யும் தன்மையும் அதிக அளவு கொண்டிருக்கும். அதேபோல் தான் இந்த கடுக்காய் பொடியை பயன்படுத்துவதின் மூலம் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு அதிக அளவு உற்பத்தி ஆகும்.

ரணகள்ளி தாவரத்தால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா

மலச்சிக்கல் நீங்க:

மலச்சிக்கல்

மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாக கடுக்காய் பொடி பயன்படுகிறது. கடுக்காய் பொடியை அரை தேக்கரண்டி அளவு இரவு உணவிற்கு பிறகு வெண்ணீரில் கலந்து அருந்தி வரும்போது நாள்பட்ட மலச்சிக்கல் குணமாகும்.

அதேபோல் மூல நோய் பாதிப்புகள் மற்றும் ஆசனவாய் எரிச்சல் போன்றவைகள் குறையும். இரைப்பை மற்றும் குடல் பகுதிகளில் உள்ள கழிவுகளை வெளியேற்றி செரிமான மண்டலத்தை பலப்படுத்த செய்யும்.

இதய ஆரோக்கியத்திற்கு:

ஆரோக்கியமான இதயம்

கடுக்காய் பொடியை இரவு உணவிற்கு பிறகு தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறையும். மேலும் இரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் நமது இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும். இதனால் இதய நோய்கள் வருவது குறையும்.

தினமும் ஒரு கைப்பிடி அளவு கிட்னி பீன்ஸை சாப்பிடுவதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா

நரம்பு பலம்பெற:

நரம்பு பலம்பெற

நரம்புகளின் ஆரோக்கியத்தை மற்றும் செயல்பாட்டை சீராக வைத்திருக்க கடுக்காய் போடி ஒரு சிறந்த மருந்தாகும். அதாவது கடுக்காய் பொடியை ஒரு மண்டலத்திற்கு தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் உங்கள் உடலில் உள்ள நரம்புகள் பலம்பெற்று ஆரோக்கியத்துடன் இருக்கும்.

கண்பார்வை மேம்படும்:

கண்

கண் பார்வை திறனை அதிகரிக்கும் தன்மை கடுக்காய்க்கு பொடிக்கு உண்டு. திரிபலா சூரணம் என்னும் மருந்து தயாரிப்பில் நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் இந்த மூன்று பொருளையும் கலந்து தயாரிக்கப்படுகிறது.

இதை இரவு உணவிற்கு பிறகு ஒரு தேக்கரண்டி அளவு வெண்ணீரில் கலந்து அருந்தி வருவதன் மூலம் கண்பார்வை திறன் மேம்படும்.

5 நாட்களுக்கு மட்டும் உப்பினை சாப்பிடாமல் இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement