ரணகள்ளி தாவரத்தால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா..!

Advertisement

Ranakalli Plant Uses in Tamil | Ranakalli Plant Uses in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். பொதுவாக நமது முன்னோர்கள் பல ஆண்டுகளுக்கு மிக மிக ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள். அதற்கு காரணம் அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையும் தான். மேலும் அவர்களுக்கு பலவகையான மூலிகை மருத்துவங்களும் தெரிந்திருந்தது. அப்படி நமது முன்னோர்களுக்கு தெரிந்திருந்த பல மூலிகை மருத்துவம் இன்றைய சூழலில் அழிந்து கொண்டு வருகின்றது என்றே கூற வேண்டும். அப்படி நமது முன்னோர்களால் பலவகையான மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ரணகள்ளி தாவரத்தின் மருத்துவ குணங்கள் பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது. அதனால் தான் இன்றைய பதிவில் ரணகள்ளி தாவரத்தின் மருத்துவ குணங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க..

ரணகள்ளி தாவரத்தின் நன்மைகள்:

Ranakalli Plant nanmaigal in Tamil

மலைபாங்கான இடங்களிலும் கிராம புறங்களிலும் எளிதாக வளரக்கூடிய தாவரம் தான் ரணகள்ளி. இதற்கு “கட்டிபோட்டால் குட்டிபோடும்” என்ற சிறப்புபெயரும் உள்ளது.

இப்பொழுது இதனால் நமக்கு கிடைக்கும் பல நன்மைகளை பற்றி விரிவாக காணலாம் வாங்க..

1. சர்க்கரை நோயை போக்கும்:

சர்க்கரை நோய்

ரணகள்ளி மூலிகையின் இலைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வாழ்நாளில் சர்க்கரை நோய்யே ஏற்படாது என்று கூறப்படுகிறது. மேலும் சர்க்கரை நோய் பாதிப்புக்கள் எந்த அளவில் இருந்தாலும், நோயின் வீரிய தன்மையை கட்டுக்குள் கொண்டுவரும் ஆற்றல் ரணகள்ளி மூலிகைக்கு உள்ளது.

நெருஞ்சில் செடியின் நன்மைகள்

2. காதுவலி போக்க உதவும்:

Ranakalli Plant Benefits in Tamil

காதுவலிக்கு ரணகள்ளி மூலிகையின் இலைகளை கசக்கி காதில் இரண்டு சொட்டுகள் விட, காது வலி உடனே குணமாகும் என்று கூறப்படுகிறது. காது சொட்டு மருந்துகள் தயாரிக்க சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மூலிகைகளில் ரணகள்ளி முக்கிய இடம் பெற்றுள்ளது.

3. மலச்சிக்கல்:

மலச்சிக்கல் பிரச்சனை

ரணகள்ளி இலையை கொண்டு தயாரிக்கப்படும் மூலிகை பொடி மலச்சிக்கலை குணமாக்கு உதவுகிறது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பொடி செரிமான பிரச்சனைகளையும் குணமாக்குகிறது.

4. புண்கள் வெட்டுக்காயங்களை குணமாக்க:

Ranakalli Plant payangal in Tamil

ரணகள்ளி மூலிகை இலைகளை, வெற்றிலையோடு சேர்த்து நன்றாக மைய அரைத்து, புண்கள் காயங்கள் கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட, வலி உடனடியாக குறைந்து, காயம் விரைவில் குணமடையும் என்று கூறப்படுகிறது.

5. முடிவளர்ச்சி அதிகரிக்க:

long hair

இந்த ரணக்கள்ளி இளநரை மற்றும் முடி கொட்டுதல் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மேலும் நரைமுடி வராமல் தடுக்கிறது. மேலும் ரணகள்ளி மூலிகை இலைச்சாற்றிலிருந்து பெறப்படும் தைலம் முடிவளர்ச்சியை அதிகரிக்கிறது. நரைமுடியை சரிசெய்வதுடன், கருகருவென, அடர்த்தியாக முடிவளர உதவுகிறது.

6. கருப்பை கோளாறுகள்:

இது பெண்களுக்கு ஏற்படும் கர்பப்பை கோளாறுகள் குணமாக்கவல்லது என்று கூறப்படுகிறது. கர்ப்ப்பை பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையோடு, சரியான முறையில் மருந்தாக எடுத்துக் கொள்ளும் போது சிறந்த பலனைத் தருகிறது.

பூனை மீசை மூலிகை பயன்கள் பற்றி தெரியுமா

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement