Vellai Ellu Benefits in Tamil | வெள்ளை எள்ளு பயன்கள்
எள் ஒரு மருத்துவ மூலிகை பொருளாகும். எள்ளில் மூன்று வகைகள் உள்ளது. அதாவது வெள்ளை எள், கருப்பு எள் மற்றும் செம்மை எள் என மூன்று பிரிவுகளில் உள்ளது. எள் செடி இந்தியா முழுவதும் பயிரிடப்பட்டு வருகிறது. எள்ளின் பயன்களை அறிந்தே இதனை அதிகம் பயிரிட்டு அதிக விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இருப்பினும் எள்ளின் அற்புதமான நன்மைகளை பற்றி பலபேருக்கு தெரியாது. எனவே அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் எள் வகைகளில் ஒன்றான வெள்ளை எள்ளின் நன்மைகளை பற்றி இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.
White Sesame Seeds in Tamil:
வெள்ளை எள்ளுவை ஆங்கிலத்தில் white sesame என்று கூறுவார்கள். இதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
White Sesame Seeds Benefits in Tamil | White Sesame Seeds in Tamil Uses:
கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க:
வெள்ளை எள்ளில் மெத்தியோனைன் உள்ளது. இது கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. எனவே வெள்ளை எள்ளை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
கைக்குத்தல் அரிசி உணவை சாப்பிடுவதால் கிடைக்கும் 12 நன்மைகள்
எலும்புகள் வலுவடைய:
வெள்ளை எள்ளில் கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. எனவே இதனை சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் வலிமையடையும். அதுமட்டுமில்லாமல், எள்ளில் உணவு புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளது. இது தசைகளை பலப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கவும் உதவுகிறது.
புற்றுநோய் வராமல் தடுக்க:
வெள்ளை எள்ளில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளது. இது புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கிறது. அதிலும் குறிப்பாக நுரையீரல் புற்றுநோய், வயிற்று புற்றுநோய் போன்றவற்றில் உள்ள புற்றுநோய் செல்களை நீக்குகிறது.
கொழுப்பை குறைக்க:
வெள்ளை எள் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. அதுமட்டுமில்லாமல், இது மலச்சிக்கல் பிரச்சனையையும் தடுக்கிறது. வெள்ளை எள்ளில் மெத்தியோனைன் உள்ளது. இது உடல் கொழுப்பை சரியான அளவில் வைக்கிறது. எனவே தினமும் 40 கிராம் வெள்ளை எள்ளை 2 மாதங்களுக்கு உட்கொண்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை எளிதில் குறைக்கலாம்.
நம் உடலில் உள்ள அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு தரும் கருப்பு எள்
வீக்கம் குறைய:
வெள்ளை எள்ளில் அழற்சி எதிர்ப்பு சக்தி உள்ளது. இது உடலில் ஏற்படும் வீக்கத்தை எதிர்த்து போராட உதவுகிறது. எனவே எள் வீக்கத்தை குறைக்கும் தன்மை உடையதாக கருதப்படுகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |