Batana Oil என்றால் என்ன.? அதன் தமிழ் பெயர் என்ன.?

Advertisement

Batana Oil in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நாம் Batana Oil பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க. நாம் அனைவருமே இந்த Batana Oil பற்றி கேள்வி பட்டிருப்போம். ஆனால், Batana Oil என்றால் என்ன.? என்பது நம்மில் பலபேருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை பற்றி தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் batana oil என்றால் என்ன.? அதன் தமிழ் பெயர் என்ன.? அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் ஆகியவற்றை பதிவிட்டுள்ளோம்.

நீங்கள் Batana எண்ணெய் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த எண்ணெயை முகம் மற்றும் முடி ஆகியவற்றிக்கு பயன்படுத்தி வருகிறார்கள். ஆகையால், இவற்றை பற்றி நாம் தெரிந்துகொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது.

Batana Oil in Tamil Name:

Batana Oil in Tamil Meaning

Batana Oil (படனா எண்ணெய்) என்பது ஓஜான் எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது. தேங்காய் எண்ணெயை ஒப்பிடக்கூடிய அளவிற்கு இது சிறப்பு வாய்ந்தது. அதுமட்டுமில்லாமல், இதன் நிறம் மற்றும் நன்மைகள் தனித்துவமானது.

Manjistha என்றால் என்ன.? அதன் நன்மைகள்

Batana Oil in Tamil Meaning:

படனா எண்ணெய் என்பது, அமெரிக்காவில் உள்ள ஹோண்டுராஸில் வனப்பகுதியில் வளர்க்கப்படும் பனை மரத்தின் கொட்டையிலிருந்து இயற்கையாக தயாரிக்கப்படுகிறது. இந்த பனை மரம் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில், குறிப்பாக ஹோண்டுராஸ் மற்றும் பெலிஸில் ஆகிய இடங்களில் அதிகமாக காணப்படுகிறது. அங்கு உள்ள மக்களால் தோல் மற்றும் முடி சிகிச்சையாக Batana Oil பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த எண்ணெய் பல தலைமுறைகளாக தோல் சிகிச்சை மற்றும் முடி பராமரிப்புப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிட தக்கது. இந்த Batana Oil -ஆனது, ஆண்டு முழுவதும் ஆண்களால் அறுவடை செய்யப்படுகிறது.

What is Batana Oil Used For:

Batana Oil Benefits for Hair in Tamil

படனா எண்ணெயில் ஆக்ஸிஜனேற்றிகள், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவை நிறைந்துள்ளது. இது தலைமுடி மற்றும் தோல் பராமரிப்பிற்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த எண்ணெய் பெரும்பாலும், முடி வளர்ச்சிக்காக பயன்படுகிறது. ஆகவே, Batana எண்ணெய் என்பது இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் தாவர அடிப்படையிலான எண்ணெய் ஆகும்.

Batana Oil Benefits for Hair in Tamil:

Batana எண்ணெயை தலைமுடிக்கு பயன்படுத்துவதன் மூலம், முடி மென்மையாகவும் அடர்த்தியாகவும் மற்றும் நீளமாகவும் வளர்கிறது. இதனை தலைகுளிப்பதற்கு முன்னதாக அல்லது ஒரு இரவு முழுவதும் தலையில் வைத்து அதன் பிறகு, குளிக்க வேண்டும். இதனை லீவ்-இன் கண்டிஷனராகவும் பயன்படுத்தலாம். ஆகவே, முடி உதிர்தல் பிரச்சனை உள்ளவர்கள், வறண்ட முடி உள்ளவர்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தி வந்தால் மென்மையான முடியை பெறலாம்.

1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் போதும் வறண்டு காணப்படும் முகம் சட்டுனு மிருதுவா மாறிவிடும்..!

Batana Oil Benefits for Skin in Tamil:

Batana Oil சருமத்தை மென்மையாகவும் நீரேற்றமாகவும் வைத்து கொள்கிறது. எனவே, சரும பராமரிப்பை விரும்புபவர்கள் இந்த எண்ணெயை சருமத்தில் பயன்படுத்தி வரலாம். மேலும், இந்த எண்ணெய் தோலழற்சி, தடிப்புத் தோல் அழற்சி மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகளை போக்குகிறது.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement