தர்பூசணி வாங்குவது எப்படி.?

Advertisement

தர்பூசணி பழம் வாங்குவது எப்படி.?

இந்த அடிக்கிற வெயிலுக்கு பழங்கள் அதிகமாக சாப்பிடுவோம். அப்படி சாப்பிடும் பழங்களில் தர்பூசணியும் ஒன்றாக இருக்கிறது. இந்த தர்பூசணியை பலருக்கும் சிவப்பாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குகிறார்கள். சில பேருக்கு எப்படி தர்பூசணியை வாங்க வேண்டும் என்று தெரிவதில்லை. அதனால் தான் இந்த பதிவில் தர்பூசணி எப்படி வாங்க வேண்டும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

தர்ப்பூசணி வாங்குவது எப்படி.?

தர்பூசணி வாங்குவது எப்படி

முதலில் தர்பூசணியை வாங்குவதற்கு முன் அதன் அடிப்பகுதியை பார்க்க வேண்டும். இந்த அடிப்பகுதியில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறமாக இருந்தால் அவை பழுத்த பழம் என்று அர்த்தம். அதுவே வெள்ளை நிறமாக இருந்தால் பழுக்காத பழம் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

தர்பூசணியில் ஆண் பழம் பெண் பழம் என்று இருவகைகள் இருக்கிறது, அதனை பற்றி காண்ப்போம்.  ஆண் பழம் என்பது நீளமாக இருக்கும். இதில் டேஸ்ட் இருக்காது. ஆனால் நீர்ச்சத்து அதிகமாக காணப்படும்.

அதுவே வட்டமாககவும், சிறியதாக இருந்தால் அவை தான் பெண் பழம் என்று அழைப்பார்கள். இதில் டேஸ்ட் அருமையாக இருக்கும். ஆனால் நீர்ச்சத்து குறைவாக காணப்படும். பழம் எவ்வளவு அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு அதில் ருசியும் இருக்கும். அதற்காக அளவு பெரியதாக உள்ள தர்பூசணியை வாங்க கூடாது. ஏனென்றால் அளவு பெரியதாக உள்ள தர்பூசணி பழத்தில் ஹார்மோன் ஊசிகள் போட்டு பெரியதாக பழுக்க வைத்திருப்பார்கள். அதனால் இந்த பழத்தை வாங்குவதை தவிர்த்து விடவும்.

தர்பூசணி தோலில் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா

தர்பூசணி பழம்  கெமிக்கல்:

தர்பூசணி பழம் சிவப்பாக இருப்பதற்காக அதில் கெமிக்கல் கலந்திருப்பார்கள். இதனை அறிந்து கொள்ளாமல் சிவப்பாக இருக்கு நல்லா பழமாய் இருக்கும் போல என்று நினைத்து கொள்வீர்கள். நல்ல சிவப்பாக உள்ள பழங்களை செக் செய்து விட்டு வாங்க வேண்டும். அதனை எப்படி செக் செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

இதனை கண்டுபிடிப்பதற்கு ஒரு டிஸ்ஸு எடுத்து கொள்ள வேண்டும். இதனை வைத்து தர்பூசணி பழத்தை  துடைத்து பார்க்க வேண்டும். இப்படி  துடைக்கும் போது அதில் கெமிக்கல் கலக்கட்டிருந்தால் அந்த கலர் டிஸ்யூவில்  ஒட்டி கொள்ளும். இதனை வைத்து அறிந்து கொள்ளலாம்.

இந்த கெமிக்கல் நிறைந்த தர்பூசணியை சாப்பிட்டு கொண்டே இருந்தால் புற்றுநோய் வரும் அபாயம் வரும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link

 

Advertisement