ICICI Bank 2000 Rd Interest Rates Calculator in Tamil
இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான வங்கிகளில் ஒன்று தான் இந்த ICICI வங்கி. இது தனது வாடிக்கையாளர்களுக்கு பலவகையான சலுகைகள், கடன்கள் மற்றும் சேமிப்பு திட்டங்களை அளித்து கொண்டு வருகின்றது. ஆனால் அவர்கள் அளிக்கும் சேமிப்பு திட்டங்கள், சலுகைகள் மற்றும் கடன்கள் போன்றவற்றை பற்றிய சரியான புரிதல் நம்மில் பலருக்கும் இல்லை. ஒரு சிலருக்கு இந்த சேமிப்பு திட்டங்கள் உள்ளது என்பது தெரியும்.ஆனால் எந்த சேமிப்பு திட்டத்தை தேர்வு செய்தால் நமக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பது தெரியாது. அதனால் தான் இன்றைய பதிவில் ICICI வங்கியின் Rd சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ICICI Bank 2000 Per Month RD Interest Rates in Tamil:
தகுதி:
இந்த ICICI Bank RD சேமிப்பு திட்டத்தில் சேமிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு 18 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்.
சேமிப்பு தொகை:
இந்த RD திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 500 ரூபாய் செலுத்தி கணக்கை தொடங்கலாம். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.
வட்டி விகிதம்:
ICICI வங்கியின் RD சேமிப்பு திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக 4.75% முதல் 7.60% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது. இந்த வட்டிவிகிதமானது நீங்கள் சேமிக்கும் தொகையினை பொருத்தும், நீங்கள் சேமிக்கும் காலத்தை பொறுத்தும் மாறுபடும்.
கனரா வங்கியில் 10,000 முதலீடு செய்தால் எவ்வளவு அசல் மற்றும் வட்டி கிடைக்கும்
உதாரணமாக..
ஜென்ட்ரல் சிட்டிசன்:
டெபாசிட் தொகை | சேமிப்பு காலம் | வட்டி தொகை | முதிர்வு தொகை |
2,000 | 5 வருடம் | Rs. 23,491 | Rs. 1,43,491 |
சீனியர் சிட்டிசன்:
டெபாசிட் தொகை | சேமிப்பு காலம் | வட்டி தொகை | முதிர்வு தொகை |
2,000 | 5 வருடம் | Rs. 25,781 | Rs. 1,45,781 |
SBI வங்கியில் மாதம் 2,000 ரூபாய் சேமித்தால் 2 வருடத்தில் கிடைக்கும் வட்டி மற்றும் அசல் எவ்வளவு
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |