உங்கள் முதலீட்டை சிறந்ததாக மாற்ற நீங்கள் தெரிந்து இருக்க வேண்டியவை…

Advertisement

சிறந்த முதலீட்டிற்கு 

ஒருவரின் தனிப்பட்ட நிதி மேலாண்மையில், அதிகம் அக்கறை செலுத்தவேண்டியது, ஓய்வு கால வாழ்கை முறை பற்றி தான். நீங்கள் ஓய்வு பெற்றவுடன், உங்களுக்கு நிலையான வருமான ஆதாரம் இருக்காது. மேலும், உங்கள் வங்கியில் உள்ள சேமிப்புகள் உங்கள் செலவுகளை ஈடு செய்யாது, ஏனெனில் பணவீக்கம் அவற்றைச் சாப்பிட்டு விடும், உங்கள் விருப்பப்பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கும் சக்தியையும்  குறைக்கும்.

நீங்கள் ஓய்வு பெறும் வயதில் உங்கள் செலவுகளை ஈடுகட்ட உங்களுக்கு பணம் தேவைப்படும் என்பதாலும், பணியிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு நமது வாழ்க்கைத்தரம் குறையாமல் இருக்கவும், பணியின் போது இருந்த வாழ்க்கைத்தரம் நிலையாக இருக்கவும், நமக்கு நிலையான வருமானம், பணி ஓய்விற்கு பிறகும் தேவைப்படுகிறது. அப்படி ஒரு நிலையான வருமானம் வரக்கூடிய திட்டத்தில் நாம் முதலீடு செய்கின்றோம் என்றால் இப்போது லாபம் தரக்கூடிய திட்டங்கள் எவை இருக்கின்றன. அவற்றில் உள்ள சாதக பாதங்களை தெரிந்துகொள்வது அவசியம்.  இன்று ULIP (Unit Linked Insurance Plan) காப்பீட்டு திட்டத்தினை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

யூலிப் என்றால் என்ன?

ulip investment options in india

யூலிப் என்பது இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டமாகும்.

அதாவது ULIPகள் காப்பீடு மற்றும் முதலீடு ஆகியவற்றின் கலவையாகும்.

நீங்கள் முதலீடு செய்யும் தொகையின் சிறு பகுதி உங்களின் பாதுகாப்பிற்கும் மீதமுள்ள தொகை சந்தையில் முதலீடும் செய்யப்படும்.

ULIP -ல் நீங்கள் முதலீடு செய்யும் தொகையை மாதம் அல்லது வருடங்களில் செலுத்தலாம்.

வரிச் சேமிப்பு மற்றும் காப்பீடு விருப்பத்தை யூலிப் திட்டங்கள் ஒருசேர வழங்குவதால், இந்தியாவில் யூலிப் திட்டங்கள் மிகப் பிரபலமாக உள்ளது.

ULIP -ல் செய்யப்படும் முதலீடுகள் அபாயங்களுக்கு உட்பட்டது. இந்த முதலீட்டு தொடர்பான கருத்துக்கள் முதலீட்டாளர்களை சார்ந்தது. அதனால் மிகவும் கவனமாக முதலீட்டை தேர்வு செய்து முதலீடு செய்ப்பவரின் கடமை.

யூலிப்பை தவிர்த்து பங்கு சந்தையிலும் முதலீடு செய்யும் வாய்ப்பும் உங்களுக்கு உள்ளது. ஆகவே நீங்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் வருமானம் பெற முடியும்.

கால அளவு:

ULIP -ல்  நீண்ட காலத்திற்கு முதலீடு ஏற்ற தேர்வாக இருக்கும்.

ULIP செயல்பாடு:

ULIP -ல், நீங்கள் செலுத்தும் தொகையில் இருந்து, ஒதுக்கீட்டுக் கட்டணங்கள், நிதிகளை நிர்வகித்தல் மற்றும் பாலிசி நிர்வாகம் போன்ற கட்டணங்கள் போக மீத தொகை முதலீடு செய்யப்படும்.

ULIP -இன் முதலீடு:

1. ULIP நிர்வகிக்கப்படும் முதலீடு ஆகும்.

2. ULIP -ல் -, ஒரு நிபுணர்களின் குழுவானது முதலீடுகளை நிர்வகிக்கும். மேலும் நிதிகள், குறிப்பிடப்படும் நோக்கத்துடன் இணக்கமாக முதலீடு செய்யப்படும்.

3. பர்சேஸுக்கு பிறகு முதலீட்டாளர்களுக்கு யூனிட்கள் ஒதுக்கித் தரப்படும். பின்பு அவ்வப்போது ஒரு யூனிட்டுக்கான NAV அறிவிக்கப்படும்.

4. ULIP என்பது இன்சூரன்ஸ் பாலிசி என்பதால், வழக்கமான முறையில் பிரீமியம் செலுத்தாமல் இருந்தால் அபாயக் காப்பீடு நிறுத்தப்படலாம்.

5. ULIP -இல் சில செலவுகள் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் போன்றும், சில முதலீட்டாளர்களின் கணக்கில் இருந்து, ஒரு சிறு எண்ணிக்கையிலான யூனிட்களை ரத்து செய்வதன் மூலமும் கணக்கிடப்படுகின்றன.

6. ஒரு ULIP முதலீடு கொண்டு, ஒன்றுக்கு மேற்பட்ட ஃபண்ட் தேர்வுகளைச் செய்ய முடியும் மற்றும் இந்த ஃபண்ட்ஸுக்கு இடையே முதலீட்டாளர்களால் மாற்றிக்கொள்ள முடியும். இருந்தாலும், ஒரு வருடத்தில் செய்யக்கூடிய மாற்றங்களில் சில திட்டங்கள் மீது, கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.

ஓய்வு காலத்தில் நிலையான வருமானம் பெற இதில் முதலீடு செய்யலாம்…

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு

 

Advertisement