போஸ்ட் ஆபிசில் 2500 ரூபாய் முதலீடு போட்டா 5 வருடத்தில் எவ்வளவு கிடைக்கும்..

Advertisement

Post Office RD 2500 Per Month 5 Years in Tamil

பணத்தை சம்பாதிப்பதை விட அதை சேமிப்பது தான் ரொம்ப முக்கியமானது. சேமிக்க  வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள் ஆனால் எதில் முதலீடு செய்வது என்ற குழப்பம் உள்ளது. நீங்கள் இன்று சேமிப்பது நாளை உங்களின் குழந்தைகளுக்கு ஏதோ ஒரு வகையில் உதவும். அதனால் தான் தினமும் முதலீடு திட்டங்களை பற்றி பதிவிட்டு  வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தபால் துறையில் உள்ள ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் 2500 ரூபா சேமித்தால் எவ்வளவு கிடைக்கும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

போஸ்ட் ஆபிஸ் RD திட்டம்:

வயது தகுதி:

18 வயது பூர்த்தி அடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ்  சேமிக்கலாம்.

எங்கு சேமிப்பது:

உங்களுடைய ஊரில் உள்ள போஸ்ட் ஆபீசிலேயே உங்களின் பெயரிலோ அல்லது உங்களுடைய வீட்டில் உள்ளவர்களின் பெயரிலோ இந்த கணக்கினை தொடங்கலாம்.

2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…

தேவையான ஆவணம்:

  1. வாக்காளர் அட்டை
  2. ரேஷன் கார்டு
  3. ஆதார் கார்டு
  4. பான் கார்டு
  5. ஓட்டுநர் உரிமம்
  6. பாஸ்போர்ட் அளவு போட்டோ

டெபாசிட்  தொகை:

போஸ்ட் ஆபீசில் உள்ள RD திட்டத்தில் குறைந்தபட்ச சேமிப்பு தொகையாக 100 ரூபாய் முதல் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் சேமித்து கொள்ளலாம்.

1 லட்சத்திற்கு 400 நாட்களுக்கு வட்டி மட்டுமே 38,042 ரூபாய் இந்தியன் வங்கியின் FD திட்டத்தில் ……

வட்டி விகிதம்:

இத்தகைய திட்டத்திற்கான வட்டி விகிதம் வருடத்திற்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும். ஆனால் நீங்கள் இந்த திட்டத்தில் சேரும் போது என்ன வட்டி விகிதம் உள்ளதோ அந்த வட்டி விகிதம் 5 வருடத்திற்கு மற்றம் இல்லாமல் இருக்கும்.

அந்த வகையில் தற்போதைய வட்டி விகிதம் 7.5% அளிக்கப்படுகிறது.

டெபாசிட் காலம்:

தபால் துறையில் உள்ள இந்த சேமிப்பு திட்டத்தில் 3 மற்றும் 5 வருடம் டெபாசிட் காலங்கள் உள்ளது. அதேபோல் டெபாசிட் காலத்திற்கு ஏற்றவாறு வட்டி அளிக்கப்படும்.

5  வருடத்தில் எவ்வளவு கிடைக்கும்:

தபால் துறையில் 5 வருடம் 2500 ரூபாய் டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை கீழே உள்ள அட்டவணையை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

டெபாசிட் காலம்  மாதாந்திர சேமிப்பு தொகை  மொத்த சேமிப்பு தொகை  மொத்த வட்டி தொகை  முதிர்வு கால அசல் தொகை
5 வருடம் 2500 ரூபாய் 1,50,000 32,228 ரூபாய்  1,82,228 ரூபாய்

 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement