SCSS in SBI vs Post Office Which is Better
மனிதனாக பிறந்த அனைவருக்கும் வாழ்க்கையில் எண்ணற்ற தேவைகள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக வயது அதிகரிக்க அதிகரிக்க பொறுப்புகளும், கடமைகளும் அதிகரித்து கொண்டே தான் போகும். இதுபோன்ற பொறுப்புகளை நாம் நிறைவு செய்ய நம்மிடம் பணம் என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்த வகையில் நாம் அன்றாடம் வேலைக்கு சென்று கூட பணம் பெறலாம். அதுவே வயது ஆகி முதிர்வு நிலைக்கு வரும் போது நம்மால் பணம் சம்பாதிக்க இயலாது. அத்தகைய சூழ்நிலையிலும் நாம் யாரையும் நம்பி இருக்க முடியாது. ஆகையால் இதுபோன்ற நிலையில் நமக்கு என்று ஒரு சேமிப்பினை சேமித்து வைக்க வேண்டும். இத்தகைய முறையினை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டது தான் மூத்த குடிமக்கள் திட்டம். இந்த சீனியர் சிட்டிசன் திட்டம் போஸ்ட் ஆபீஸ் மற்றும் வங்கிகளில் இருக்கிறது. அதனால் நம்மில் பெரும்பாலான நபருக்கும் இரண்டில் எதில் முதலீடு செய்வது என்ற குழப்பங்கள் உள்ளது. எனவே இரண்டில் எது சிறந்தது என்று இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம்.
தபால் துறையில் உள்ள RD திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்வது லாபமா.. நஷ்டமா..
தபால் துறை VS SBI பேங்க் சீனியர் சிட்டிசன் திட்டம்:
வயது தளர்வு:
இத்தகைய திட்டத்தில் 55 முதல் 60 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் சேர்ந்து பயன்பெறலாம். மேலும் இதில் ஒரு நபர் தனியாகவோ அல்லது மூன்று நபர்களுடன் சேர்த்து கூட்டாக வேண்டுமானாலும் கணக்கினை தொடங்கலாம்.
சேமிப்பு தொகை:
போஸ்ட் ஆபீஸ் மற்றும் SBI வங்கி என இரண்டிலும் குறைந்தப்பட்ச சேமிப்பு தொகையாக 1000 ரூபாய் முதல் அதிகப்பட்ச சேமிப்பு தொகையாக 30,00,000 ரூபாய் வரையிலும் சேமித்துக் கொள்ளலாம்.
வட்டி விகிதம்:
அதேபோல் இரண்டிலும் வட்டி விகிதமாக 8.2% வரை அளிக்கப்படுகிறது. மேலும் உங்களின் வட்டி விகிதம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு அளிக்கப்படும்.
சேமிப்பிற்கான கால அளவு:
சீனியர் சிட்டிசன் திட்டத்திற்கான முதிர்வு காலமாக 5 வருடம் தபால் துறை மற்றும் SBI வங்கியிலும் அளிக்கப்படுகிறது. ஒருவேளை கணக்கு முடிந்த பிறகு மீண்டும் சேமிக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கான வாய்ப்பும் 3 வருடம் வழங்கப்படும்.
சேமிப்பு கணக்கு தொடங்கும் முறை:
மூத்த குடிமக்களுக்கான திட்டத்தில் சேர விரும்புவர்கள் தபால் துறை மற்றும் SBI பேங்க் இரண்டில் எதில் சேர விவரம்புகிறார்களோ அந்த இடத்திற்கு சென்று கணக்கினை தொடங்க வேண்டும்.
தபால் துறை RD vs இந்தியன் வங்கி RD எதில் முதலீடு செய்தால் வட்டி அதிகமாக கிடைக்கும்..
SCSS in SBI vs Post Office இரண்டில் எது சிறந்தது..?
சீனியர் சிட்டிசன் திட்டத்தினை பொறுத்தவரை இது அரசாங்கத்தால் இயக்கப்படும் ஒரு திட்டமாக உள்ளது. அதனால் தபால் துறை மற்றும் SBI வங்கி என இரண்டிலும் ஒரே மாதிரியான விதிமுறைகள், தகுதிகள் மற்றும் வட்டி விகிதம் என அளிக்கப்படுகிறது.
ஆனால் இதில் ஒரே ஒரு வசதி வேறுபட்டு உள்ளது. அதாவது வங்கியில் ஆன்லைன் வசதி உண்டு. அதுவே போஸ்ட் ஆபீஸ் என்று பார்த்தால் ஆன்லைன் வசதி கிடையாது. எனவே இரண்டில் அது உங்களுக்கு ஏற்றதாக உள்ளதோ அதே நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |