Mutual Fund Vs SIP
பொதுவாக நாம் ஒரு பங்கு சந்தையில் முதலீடு செய்ய போகிறோம் என்றால் அதை பற்றி தெளிவாக தெரிந்துக்கொள்ளவில்லை என்றாலும் கூட அதில் ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் அப்போது தான் அதில் ஏற்படும் நஷ்டம் மற்றும் லாபம் இரண்டினையும் புரிந்து கொள்ள முடியும். அதுபோல இதற்கு அடுத்த நிலையில் ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால் நாம் முதலீடு செய்வதற்கு முன்பு 2 பங்கு சந்தையினை ஒப்பிட்டு பார்த்து அதில் நமக்கு எது சிறந்தது என்று தெரிந்துக்கொண்டு அதன் பிறகும் முதலீடு செய்யலாம். ஆனால் இதனை யாரும் செய்வதில்லை. அதனால் தான் இன்றைய பதிவில் Mutual Fund or SIP இரண்டிற்கு இடையே உள்ள வேறுபாடு என்ன என்று பார்க்கப்போகிறோம்.
Mutual Fund -ல் முதலீடு செய்பவரா நீங்கள்..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..!
Mutual Fund Vs SIP இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு:
♦ மியூச்சுவல் பண்டில் நாம் முதலீடு செய்ய வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட அளவிலான மொத்த தொகையினை தான் முதலீடு செய்ய முடியும். ஆனால் SIP-யில் சிறிய அளவினை தொகையினை கூட மாந்தோறும் நீண்ட கால அளவில் முதலீடு செய்யும் வசதி இருக்கிறது.
♦ அதேபோல நாம் முதலீடு செய்யும் எந்த பங்கு சந்தையிலும் ஏற்றம் இறக்கங்கள் இருக்கும். ஆனால் மியூச்சுவல் பண்ட் மற்றும் SIP- யினை ஒப்பிடும் போது மியூச்சுவல் பண்டில் அதிகமான ஏற்றம் இறக்கம் என்று கூறப்படுகிறது.
♦ பங்கு சந்தை என்றால் பரஸ்பர நிதிகள், நிதி மேலாளரின் கட்டணம் மற்றும் பவர்த்தனை மதிப்பு ஆகியவற்றை எல்லாம் சேர்த்து முதலீடு செய்யும் நபருக்கு ஆண்டு பராமரிப்பு கட்டணம் என்று குறிப்பிட்ட அளவிலான தொகை கட்டணமாக விதிக்கப்படும்.
♦ இதனை பார்க்கும்போது SIP-யில் மியூச்சுவல் பண்ட்டை விட குறைந்த அளவிலான தொகையாக இருக்கிறது. ஆனால் மியூச்சுவல் பண்ட் என்பது மிகவும் பாதுகாப்பான பங்கு சந்தை நிறுவனமாகும்.
♦ மியூச்சுவல் பண்ட் என்பது பெரிய அளவிலான பங்கு சந்தை ஆகும். ஆனால் SIP என்பது மியூச்சுவல் பண்ட் போன்ற பெரிய பங்கு சந்தையில் முதலீடு செய்யும் ஒரு முறை என்று கூறப்படுகிறது.
♦ SIP-யை விட மியூச்சுவல் பண்டில் தான் வீட்டு மனை பத்திரம் ஆகியவற்றை வைத்து முதலீடு செய்யும் இருக்கிறது. ஆனால் SIP-யில் முதலீடு செய்யும் போது உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த முறையினை நீங்கள் மியூச்சுவல் பண்டில் செய்ய முடியாது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 மியூச்சுவல் ஃபண்ட் தகவல்கள்
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |