ஆன்லைன் டிரேடிங் என்றால் என்ன?

Advertisement

What is Online Trading in Tamil!

தற்போதைய காலக்கட்டத்தில் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்வதனை போலவே  ஆன்லைன் மூலம் டிரேடிங்கும் செய்யலாம். ஒரு இன்வெஸ்டர் வீட்டில் இருந்தபடியே ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்தி ஆன்லைனில் டிரேடிங் எளிதாக செய்யலாம்.  ஆன்லைன் மூலம் டிரேடிங் செய்ய நல்ல இன்டர்நெட் இணைப்பு, 3-இன்-1 அக்கவுண்டிற்கான சப்ஸ்கிரிப்ஷன், மொபைல் பேங்கிங் செயலி மற்றும் பேங்க் அக்கவுண்டில் போதுமான நிதிகள் போன்றவை  இருந்தாலே போதும். ஆன்லைன் மூலம் டிரேடிங் செய்யலாம். இப்பதிவில் பார்க்க இருப்பது ஆன்லைன் டிரேடிங் பற்றிதான் தெளிவாக தெரிந்துக்கொள்ளபோகிறோம்!

ஆன்லைன் டிரேடிங்:

ஆன்லைனில் டிரேடிங் செய்ய முதலில் டீமேட் அக்கவுண்ட் மற்றும் டிரேடிங் அக்கவுண்ட்டை திறக்க வேண்டும். ஆன்லைன் டிரேடிங் என்பது ஆன்லைன் பிளாட்ஃபார்ம் மூலம் பத்திரங்களின் டிரேடிங்கை எளிமையாக்குகின்றது. போரட்டல்கள், ஈக்விட்டிகள், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பொருட்கள் போன்ற பல நிதி கருவிகளின் டிரேடிங்கை இது மிகவும் எளிமையாக்குகின்றது.

ஸ்டாக் மார்க்கெட்டில் இன்வெஸ்ட்மென்ட் செய்வது சந்தையின் பல ஏற்ற இறக்கங்களை உள்ளடக்கியது.

ஆன்லைனில் டிரேடிங்கை தொடங்க நீங்கள் ஒரு ஆன்லைன் புரோக்கிங் நிறுவனத்துடன் ஒரு ஆன்லைன் டிரேடிங் அக்கவுண்ட்டை திறக்க வேண்டும். அனைத்து ஸ்டாக் மார்க்கெட்டுகளின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினராக இருக்கும் மற்றும் SEBI(Securities and Exchange Board of India) நிறுவனத்தின் மூலம் சான்றளிக்கப்பட்ட ஒரு புரோக்கரை தேர்வு செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள் =>Types of Traders! நீங்க என்ன மாதிரி டிரேடிங் பண்ண போறிங்க?

ஸ்டாக் மார்க்கெட் பற்றி அடிப்படைகளை தெரிந்துக்கொள்ள வேண்டும்:

சப்ளை மற்றும் கோரிக்கை அமைப்பில் ஸ்டாக் மார்க்கெட்டானது  செயல்படுகிறது. ஸ்டாக் மார்க்கெட்டில் இன்வெஸ்ட்மென்ட் பற்றிய அதிக அறிவை பெற்றிருக்க வேண்டும்.

நிதி செய்திகள், இணையதளங்களில் டேப்களை வைத்திருப்பது, பாட்காஸ்ட்களை கேட்பது, மற்றும் இன்வெஸ்ட்மென்ட் பற்றிய படிப்புகளை படிப்பது போன்றவை ஒரு சிறந்த இன்வெஸ்ட்டராக மாறுவதற்கான ஒரு நல்ல வழியாகும்.

டிரேடிங் செய்ய பயிற்சி:

வெற்றிகரமாக ஆன்லைனில் டிரேடிங் செய்ய பயிற்சி என்பது அவசியம். ஆன்லைன் டிரேடிங்கை கற்றுக்கொள்ள ஆன்லைன் ஸ்டாக் டிரேடிங் சிமுலேட்டர்கள் ஒரு சிறந்த வழிமுறையாகும். இது ஒரு சிமிலேட்டர் என்பதால் நீங்கள் செய்யும் இழப்புகள் உங்களை பாதிக்காது, எனவே நீங்கள் எவ்வித அச்சமும் இன்றி டிரேடிங்கை கற்றுக்கொள்ளலாம்.

ஒரு திட்டத்தை தீட்ட வேண்டும்:

டிரேடிங் செய்யும் போது நீங்கள் உங்களின் இன்வெஸ்ட்மென்ட் உத்திகளை பயன்படுத்தி சிந்திக்க வேண்டும். நீங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் எவ்வளவு இன்வெஸ்ட்மென்ட் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை முன்கூட்டியே தீர்மானம் செய்துகொள்ள வேண்டும். மேலும் நீங்கள் ஏற்க விரும்பும் இழப்பின் மீதான வரம்புகளையும் அமைக்க வேண்டும்.

இவை அனைத்தையும் நீங்கள் கருத்தில் கொண்டால் மட்டுமே ஆன்லைன் டிரேடிங் உங்களுக்கு எளிதாகவும் மற்றும் இலாபகரமானதாகவும் அமையும்.

இதையும் படியுங்கள் =>இன்ட்ராடே டிரேடிங் என்றால் என்ன?

ஸ்டாக் டிரேடிங் என்பது ஒரு லாங் டெர்ம் இன்வெஸ்ட்மென்ட் ஆகும். அதற்கு பொறுமை மற்றும் விடாமுயற்சி என்பது மிக மிக அவசியம். இதில் பங்குகள், பத்திரங்கள் மற்றும் பிற தொடர்புடைய நிதி கருவிகள் போன்ற பத்திரங்களை ஆன்லைனில் கொள்முதல் செய்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்றவைவற்றை உள்ளடக்கியது.

இதற்காக உங்களுக்கு ஒரு டீமேட் அக்கவுண்ட் மற்றும் டிரேடிங் அக்கவுண்ட் தேவைப்படும்.

டீமேட் அக்கவுண்ட் – வாங்கிய பங்குகளின் யூனிட்களை சேமிக்கு பொதுவான களஞ்சியமாக செயல்படுகிறது.

டிரேடிங் அக்கவுண்ட் – பங்கை வாங்கும் மற்றும் விற்கும் தளமாக செயல்படுகிறது.

டிரேடிங்கின் நிதியை எளிதாக்க டிரேடிங் அக்கவுண்ட்டுடன் ஒரு பேங்க் அக்கவுண்ட் இணைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் டிரேடிங் நன்மைகள்:

ஏதேனும் விளக்கங்கள் அல்லது கேள்விகள் இருந்தால் இன்வெஸ்ட்டர்கள் அர்ப்பணிக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை மூலம் உதவியினை பெற முடியும்.

இதையும் படியுங்கள் =>Trading Account மற்றும் Demat Account வேறுபாடுகள் என்ன?

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு

 

 

Advertisement