Types of Traders in Stock Market in Tamil
பங்கு சந்தையில் டிரேடிங் செய்ய போகிறீர்களா? நீங்கள் என்ன விதமான Trader வகையை சார்ந்தவர் என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு டிரேடிங் செய்யுங்கள். நிறைய வகையான Traders இருக்கின்றனர். உங்களுக்கு பயன்படும் வகையில் இப்பதிவில் பார்க்க இருப்பது என்ன மாதிரியான traders இருக்கின்றார்கள். அவர்கள் எவ்வாறு trading செய்கின்றனர் என்பதனை பற்றித்தான். இப்பதிவின் மூலம் நீங்கள் எந்த வகை Trader என்பதை அறிந்துக்கொள்ளலாம். பின் அதற்கேற்ப trading செய்ய தொடங்குங்கள்!
Trader(வர்த்தகர்) என்பவர் யார்?
Trader என்பவர் குறுகிய கால இலாபத்தை எதிர்பார்த்து பங்குகள் அல்லது பொருட்களை வாங்குபவர் மற்றும் விற்பவர் ஆவார்.
பலவகையான முறையில் வர்த்தகர்கள் பங்கு சந்தையில் வர்த்தகம் செய்து வருகின்றனர்.
1.Scalpers
Scalpers என்பவர்கள் குறைந்தபட்சம் 5 நொடிகளில் இருந்து அதிகபட்சம் 15 நிமிடங்களுக்குள் ஒரு Trade-யை முடித்து விடுவார்கள்.
அதாவது Scalpers முதலீடு செய்த உடனே பலனை எதிர் பார்ப்பவர்கள். காத்திருப்பு தன்மை இல்லமால் முதலீடு செய்த உடனே அது இலாபமா? நட்டமா? என்று தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருப்பவர்கள். அந்த பணத்தினை உடனே எடுத்துக்கொண்டு வந்துவிட வேண்டும் என்று நினைப்பவர்களே Scalpers ஆவர்.
இதையும் படியுங்கள்=>பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி தெரியுமா?
2. Day Traders
Day Traders என்பவர்கள் பக்குவம் அடைந்தவர்கள். இவர்கள் காலை 9:15Am மணி முதல் மாலை 3:15 Pm மணிக்குள் trade-யை முடித்துவிடுவார்கள். அடுத்த நாளிற்க்கு trade-யை கொண்டு செல்ல மாட்டார்கள்.
உதாரணமாக 9 மணிக்கு ஸ்டாக்கினை வாங்குகிறார்கள் என்றால் அன்று மாலை 3 மணி வரைதான் ஸ்டாக்கினை hold பன்ன முடியும். அதன் பின் ஸ்டாக்கினை hold பன்ன முடியாது.
ஏன் சிலர் இந்த முறையினை தேர்ந்தெடுகிறார்கள் என்றால் சிலருக்கு trade செய்த பின் இரவு முழுவது தூங்க முடியாது. அது இலாபம் ஆகுமா? நட்டம் ஆகுமா? என்று யோசனை செய்துகொண்டே இருப்பார்கள். அப்படி வேண்டாம் என்று நினைப்பவரக்ள இந்த Day Traders ஆவர். தனது Trade-யை அன்றே தொடங்கி அன்றே முடித்துவிடுவார்கள். அடுத்த நாளுக்கு கொண்டு செல்ல மாட்டார்கள்.
இதையும் படியுங்கள்=>பங்குச்சந்தை பற்றிய புத்தகங்கள்..!
3. Swing Trader
இவர்கள் அதிக பக்குவம் நிறைந்தவர்கள். swing traders என்பவர்கள் ஸ்டாக்கினை இன்று வாங்கினால் நாளைக்கு விற்பார்கள் அல்லது இரண்டு, மூன்று நாட்கள் கழித்து விற்பார்கள் அல்லது ஒரு வாரம், இரண்டு வாரம் வரை காத்திருந்து எதிர்பார்த்த இலாபம் கிடைத்ததும் விற்பார்கள். இவர்களின் முதலீடும் அதிகமாக செய்வார்கள்.
4. Short term Trader
Stock மார்க்கெட்டினை மட்டுமே நம்பி இருக்க மாட்டார்கள். வேறு எதாவது தொழிலை செய்துகொண்டே ஸ்டாக் மார்க்கெட்டினையும் கூடுதல் தொழிலாக செய்பவர்கள். இவர்கள் ஒரு மாதம் முதல் முதல் 6, 7 மாதங்கள் வரை கூட ஸ்டாக்கினை hold செய்து வைத்திருப்பர்.
5. Long term Trader or Investor
இவர்களும் Stock மார்க்கெட்டினை மட்டுமே நம்பி இருக்க மாட்டார்கள். வேறு எதாவது தொழிலை செய்துகொண்டே ஸ்டாக் மார்க்கெட்டினையும் கூடுதல் தொழிலாக செய்பவர்கள். இதில் முதலீடு செய்பவர்கள் 6 மாதத்திற்கு மேலாக அல்லது 1 வருடம் 2 வருடங்கள் வரை கூட ஸ்டாக்கினை hold செய்வார்கள்.
இதையும் படியுங்கள்=>Trading Account மற்றும் Demat Account வேறுபாடுகள் என்ன?
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |