தமிழ் மூலம் தெலுங்கு கற்க ஆசையா?

Advertisement

தமிழ் வழி தெலுங்கு கற்க | Learn Telugu Through Tamil

வணக்கம் நண்பர்களே.. மனிதராக பிறந்த அனைவரும் வகையான மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இந்த உலகத்தில் உள்ள பல இடங்களுக்கு சென்று வர எந்த ஒரு தயக்கமும், பயமும் இல்லாமல் இருக்கலாம். ஆகவே நாம் நமது தமிழ் மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்வது மிகவும் நல்லது. நீங்கள் எந்த மொழியை கற்றுக்கொள்ள நினைத்தாலும் அதற்கு முதலில் உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்க வேண்டும். அப்பொழுதான் நாம் அந்த மொழியை முழுமையாவையும், சரியாகவும் கற்றுக்கொள்ள முடியும். சரி இந்த பதில் தமிழ் மூலம் தெலுங்கு கற்க விரும்புபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தெலுங்கு பாஷை பேச சில அடிப்படையான தெலுங்கு வார்த்தைகளை தமிழ் எழுத்துக்கள் மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றை படித்து பயன் பெறுங்கள்.

தமிழ் மூலம் தெலுங்கு கற்க ஆசையா?

உறவு முறைகளின் பெயர்:

Learn Telugu Through Tamil
தமிழ் தெலுங்கு
அம்மா அம்மா
அப்பா நானா
அண்ணா அன்னையா
தம்பி தம்முடூ
அக்கா அக்கா
தங்கை செல்லி
தாத்தா தாதையா
பாட்டி அம்மம்மா

காய்கறிகள் பெயர்கள்:

Learn Telugu Through Tamil
தமிழ் தெலுங்கு
காய்கறிகள் கூறகயலு (kuragayaalu)
கத்திரிக்காய் வங்காயா (vankayaa)
காலிஃபிளவர் காலிஃபிளவர் (cauliflower)
கொத்தமல்லி கொத்திமீரா (kottimeera)
தேங்காய் கொப்பாரிகாய (kobbarikaya)
புதினா புதினா (puthina)
எலுமிச்சை நிம்மகாயா (Nimmakayaa)
வெங்காயம் உள்ளிப்பாய (ullipaaya)
உருளைக்கிணக்கு பங்காளதும்பா (Bangaladumpa)
வெள்ளைப்பூண்டு வெள்ளுள்ளிப்பாய (Vellullipaya)
தக்காளி டமாட்டா (Tamata)
வெள்ளரிக்காய் கீர தோசகாய (keera Dosakaya)
முருங்கைக்காய் முலக்காய (Mulakkaya)
வெண்டைக்காய் பெண்டக்காய (Bendakaya)

நிறங்களின் பெயர்கள்:

தமிழ் தெலுங்கு
நிறம் ரங்கு (Rangu)
வெள்ளை தெழுப்பு (Telupu)
நீலம் நீலம் (Neelam)
பச்சை ஆக்குபச்ச (Aakupacha)
சிகப்பு எறுப்பு (Erupu)
ஆரஞ்சு காஷாயம் (Kaashayam)
பழுப்பு (ப்ரவுண்) கோதுமா (Godhuma)
மஞ்சள் பசுபுபச்ச (Pasupupacha)
இளஞ்சிவப்பு (பிங்க்) குலாபி (Gulabi)

சமையல் பொருட்கள் பெயர்:

தமிழ் தெலுங்கு
பால் பாலு (paalu)
தயிர் பெருகு (Perugu)
நெய் நெய்யி (Neiyyi)
அரிசி பீயம் (Beeyam)
கோதுமை கோதுமலு (Godhumalu)
முட்டை குட்டு (Guddu)
உப்பு உப்பு (Uppu)
சர்க்கரை பஞ்சதாரா (Panchadaara)

பொதுவான தெலுங்கு வார்த்தைகள் தமிழில்:

தமிழ் தெலுங்கு
வணக்கம் நமஸ்தே (Namaste)
காலை வணக்கம் சுபோதயம் (Subhodayam)
மதியம் மதியானம் (Madyanam)
மாலை சாயந்தரம் (Sayantram)
நீ நுவ்வு (Nuvvu)
நீங்க மீறு (Meeru)
நான் நேனு (Nenu)
நாம் மனம் (Manam)
தீ அக்னி (Agni)
ஓடு பருகேது (Parugethu)
நிறுத்துங்க ஆபண்டி (Aapandi)
திருடன் தொங்கா (Donga)
இன்று இரோஜு (Iroju)
தேதி தேதி (Thedhi)
நேற்று நின்னா (Ninna)
நாளை ரேபு (Repu)
தினமும் பிரதிரோஜு
 வாரத்திற்கு ஒரு முறை வாரம் லோ ஒகசாரி (vaaram lo okasaari)
நாள் ரோஜு (Roju)
வாழ்த்துக்கள் சுபகங்க்ஷலு (Subhakankshalu)
பிறந்தநாள் வாழ்த்துக்கள் பூட்டின ரோஜு சுபகங்க்ஷலு (Puttinaroju Subhakankshalu)
பயணம் பிரயாணம் (prayaanam)
சில கொன்னி (Konni)
கொஞ்சம் கொஞ்சம் (Konchem)
சரி சரே (Sare)
வாங்க கொணடம் (Konadam)

 

இந்தி கற்க விரும்புபவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து பயன்பெறுங்கள்  தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்வது எப்படி?

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement