வினை மரபு சொற்கள்

Advertisement

Vinai Marabu Sorkal in Tamil

நாம் பள்ளி பருவத்தில் இலக்கணங்களை பற்றி படித்திருப்போம். ஆனால் அவை இப்போது அதனை மறந்திருப்போம். அரசு தேர்வுகளில் தமிழ் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. ஏனென்றால் அரசு தேர்வுகளில் தமிழ் கேள்விகள் அதிகமாக கேட்கப்படுகிறது. அதனால் தமிழை பற்றி அறிந்திருப்பது அவசியமானது.

அதுமட்டுமில்லாமல் உங்களுடைய குழந்தைகளுக்கு தமிழ் பாடங்களை சொல்லி தர வேண்டியிருக்கும். அதில் வீட்டு பாடமாக கொடுத்திருப்பார்கள். அதனால் தான் இந்த பதிவில் வினை மரபு சொற்கள் என்றால் அதன் சொற்கள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

வினை மரபு சொற்கள் என்றால் என்ன.? 

தொன்றுதொட்டு வழக்கத்தில்உள்ள  சொற்களை மரபு சொற்கள் என்றது கூறுவோம். ஒரு செயலை குறிப்பிட்டு கூறும் சொற்களை வினை மரபு சொற்கள் என்று கூறுகிறோம்.

வினை மரபுச் சொற்கள்:

நாற்று நடு அப்பம் தின் காய்கறி அரி
இலை பறி நெல் தூற்று களை பரி
பழம் தின் நீர் பாய்ச்சு விளக்கேற்று
உணவு உண் அம்பு எய்தார் ஆடை நெய்தார்
பாட்டுப்பாடு மலர் கொய் கிளையை ஒடி
மரம் வெட்டு விதையை விதை படம் வரை
கட்டுரை எழுது கவிதை இயற்று தீ மூட்டு
உமி கருக்கினார் ஓவியம் புனை கூடை முடைந்தான்
சுவர் எழுப்பு தண்ணீர் குடி பால் பருகு
மாத்திரை விழுங்கு முறுக்குத்தின் கூரை வேய்ந்தான்
தயிர் கடைந்தால் கோலம் இடு நடனம் ஆடு

தூய தமிழ் வார்த்தைகள்

எடுத்துக்காட்டு:

  • மாலினி பூக்களை கொய்தாள்
  • குயவன் பானை வனைந்தான்
  • தாத்தா கூடை முடைந்தார்
  • தொழிலாளர்கள் கூரை வேய்தனர்
  • சீடன் அம்பை எய்தான் ‘
  • சீதா பால் பருகினாள்
  • புனிதா பூவை பறித்தாள்
  • அபிநயா மாத்திரை விழுங்கினாள்
  • அருண் முறுக்கு தின்னான்
  • கொத்தனார் சுவற்றை எழுப்பினார்
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி

 

Advertisement