நம்பிக்கை மோசடி செய்தால் சட்டத்தில் என்ன தண்டனை தெரியுமா..?

nambikkai mosadi sattam in tamil

தண்டனை சட்டம் 409, 410 மற்றும் 411 பற்றிய விளக்கம்

வணக்கம் நண்பர்களே..! மனிதனாக பிறந்த அனைவருக்கும் வெற்றி, தோல்வி, நம்பிக்கை, துரோகம் என்று எல்லாமும் கலந்த ஒன்று தான் வாழ்க்கையாக அமைகிறது. அத்தகைய நம்பிக்கையை நம் மீது ஒருவர் வைத்தாலும் சரி வைக்காவிட்டாலும் சரி அவர்களுக்கு துரோகம் என்று ஒன்று செய்யக்கூடாது. அத்தகைய துரோகத்தை செய்தால் சட்டங்களிலும் இடம் உண்டு என்பதை இன்றைய பதிவு தெரியப்படுத்துகிறது. நம்பிக்கை துரோகத்திற்கான சட்டங்கள் என்ன மற்றும் அதில் சொல்லப்படும் குற்றங்கள் என்ன என்பதை பற்றி தெரிந்துக்கொள்ள பதிவை முழுவதுமாக படித்து பாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ இந்திய தண்டனை சட்டம் பிரிவு 116 பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..?

IPC Section 409 in Tamil:

இந்திய தண்டனை சட்டம் 409 என்பது அரசு பணியில் வேலை செய்யும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அரசு சார்ந்த பணம், நகை மற்றும் சொத்துக்கள் எதுவாக இருந்தாலும் அதனை நம்பிக்கை துரோகம் செய்து அவர்களே அந்த பொருட்களை எடுத்துக்கொள்வது குற்றமாகும். 

அதுபோல நாம் அனைவரும் நமக்கு பண தேவைகள் இருக்கும் போது நம்முடைய பொருட்களை அடமானம் வைத்து பணம் பெறுவது வழக்கம். அப்படி அடமானம் வைத்த பொருட்களை திரும்ப தராமல் மோசம் செய்தால் அது IPC Section 409 -ன் படி குற்றமாகும்.

மேலே சொல்லப்பட்டுள்ள குற்றங்களுக்கு IPC Section 409-ன் கீழ் குற்றவாளிகளுக்கு 10 வருட சிறை தண்டனை மற்றும் அதற்கான தக்க அபராதமும் விதிக்கப்படும்.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 323-யின் விளக்கம்

IPC Section 410 in Tamil:

IPC Section 410 என்பது ஒருவர் மற்றொவரை மிரட்டியோ அல்லது கொலை முயற்சியில் ஈடுபட்டோ அவரிடம் உள்ள பொருட்கள் அல்லது சொத்துக்களை எடுத்துக்கொள்ளுதல் நம்பிக்கை துரோகத்தின் அடிப்படையில் சொல்லப்படுகிறது.

அதுபோல திருடிய அந்த பொருட்களை இந்தியா மற்றும் பிற நாடுகளில் அதனை மாற்றினாலோ அல்லது மாற்ற முயற்சி செய்தாலோ அதுவும் தண்டனை சட்டம் 410- ன் படி குற்றமாகும். 

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 506 2-யின் விளக்கம்

IPC Section 411 in Tamil:

தண்டனை சட்டம் 410-ல் சொல்லப்பட்டுள்ள குற்றங்கள் IPC Section 411– கீழ் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும். தண்டனை சட்டம் 411- ன் படி குற்றவாளிகளுக்கு மூன்று வருட சிறை தண்டனை மற்றும் அபராதம் அளிக்கப்படும்.

இதையும் படியுங்கள்⇒ இந்திய தண்டனை சட்டம் 302 மற்றும் 304 பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..?

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.Com