Article 370
சட்டங்கள் மக்களின் ஒழுக்கத்திற்கான விதி மற்றும் நெறிமுறையாக பார்க்கப்படுகிறது. சுதந்திர இந்தியாவில் 26 ஜனவரி 1950 அன்று இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்தது. அந்த சட்டம் இந்தியாவின் குடிமக்கள் அனைவரையும் ஒன்றாக எந்த ஒரு பேதம் இன்றி வழிநடத்த உருவாக்கப்பட்டது. அதில் ஒவ்வொரு இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகள், உரிமைகள் முதலியவை அடங்கியுள்ளது. இந்தியாவின் பரப்பளவில் தொடங்கி ஒவ்வொருவரின் கடமை, தங்களின் உரிமையை அடைய வழிவகை அனைத்தும் அடங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும் என்றாலும் அதிலும் சில விதிவிலக்குகள் காணப்படுகிறது.
இந்தியாவின் வடமேற்கு எல்லையாக காணப்படும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குத்தான் இந்த விதிவிலக்கு, இந்தியாவின் தனி மாநில அந்தஸ்தை கொண்ட மாநிலமாக காணப்பட்ட ஜம்மு காஷ்மீர் இந்திய அரசியலமைப்பில் உள்ள பிரிவு 238 க்கு உட்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை பிரிவு 370 கூறுகிறது. அப்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்துக்கான இந்திய அரசியலமைப்பு பிரிவு 370 என்ன கூறுகின்றது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
Article 370
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துக்கான சட்ட பிரிவு 370 ஆகும்.
இந்திய அரசியலமைப்பின் 370வது பிரிவின் படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை உள்ளடக்கியதாக உள்ளது.
இந்த சிறப்பு அந்தஸ்தின்படி இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மட்டுமே மாநில சுயாட்சியை கொண்டதாக விளங்குகிறது.
இந்திய நாடாளுமன்றத்தில் ராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற அனைத்து துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தில் அமல்படுத்தமுடியாது.
இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் தனி கொடி உண்டு. ஆனால் இந்த கொடியை இந்திய தேசிய கொடியுடனே ஏற்ற வேண்டும்.
இந்திய உச்சமன்றத்தின் ஆளுகையின் கீழ் இருந்தாலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தனி அரசியல் சாசனம் உண்டு.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு ஆளுநரை நியமிக்கும் போது அந்த மாநிலத்தின் முதல்வரை ஆலோசித்தே நியமிக்க வேண்டும்.
இந்தியாவின் பிற மாநிலங்களை சேர்ந்த எவரும் ஜம்மு காஷ்மீரீல் அசையா சொத்துக்களை வாங்க முடியாது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்ட மன்ற பதவிக்காலம் 6 ஆண்டுகள்.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான article 370 மாநிலத்தின் எல்லைகளை இந்திய நாடாளுமன்றத்தால் மாற்ற முடியாது என்பதை விளக்குகிறது.
சட்ட விரோதமான கூட்டம் கூட்டினால் இந்த தண்டனை தான் கிடைக்கும்
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Law |