IPC 395 and 396 in Tamil
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தங்களின் சட்ட ஒழுக்கத்தை பாதுகாப்பதற்காக சட்டங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். அதே போல் தான் நமது இந்தியா நாட்டிலும் நடக்கும் அநீதிகள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நமது பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் பற்றிய சரியான புரிதல் இருக்கின்றதா என்றால் நம்மில் பலருக்கும் கிடையாது.
அதனால் தான் உங்களுக்கு பயனுள்ள வகையில் தினமும் ஒவ்வொரு வகையான தண்டனை சட்ட பிரிவுகளின் விளக்கத்தினை பொதுநலம்.காம் பதிவில் கூறப்பட்டு வருகின்றன. அதே போல் இன்றைய பதிவில் இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 395 மற்றும் 396 பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த சட்ட பிரிவுகளில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் மற்றும் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.
கொள்ளையடித்தால் இதுதான் தண்டனையாம்
IPC 395 in Tamil:
இப்பொழுது ஒரு நபருக்கு சொந்தமான பொருட்கள், செல்வங்களை மற்றும் சொத்துக்களை அவரின் அனுமதியின்றி அவரிடம் இருந்து கூட்டாக பறித்து கொள்வது கூட்டு கொள்ள எனப்படும். இது ஒரு குற்றமாகும்.
இத்தகைய கூட்டுக் கொள்ளை அடிப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அத்துடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.
IPC 396 in Tamil:
மேலே கூறப்பட்டது போல் கூட்டு கொள்ளையில் ஈடுபடும் பொழுது அந்த கூட்டு கொள்ளையில் ஈடுபடும் நபர் யாராவது ஒரு நபரை கொள்ளை செய்துவிட்டால் அது குற்றமாகும்.
அதனால் அந்த கூட்டுக்கொல்லையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைக்காவல் தண்டனையாக விதிக்கப்படும். அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.
இந்திய நாட்டிற்கு எதிரான சட்டவிரோதமான செயலை செய்தால் தண்டனை கிடைக்கும்
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Law |