கந்து வட்டி சட்டம் 2003

Advertisement

கந்து வட்டி சட்டம் 2003

மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் சம்பாதிக்கின்ற பணமானது அன்றைய நாள் தேவைகளை சமாளிப்பதற்கே சரியாகி விடுகிறது. ஆசைப்பட்டதை நிறைவேற்றுவதற்காக வெளியில் பணத்தை கடனாக வாங்குகிறார்கள். கடனை வாங்கிய பிறகு அதற்கான வட்டி ஆனது அதிகமாக இருக்கும். இதனை கட்டுவதற்குள் ஏன்டா கடன் வாங்கினோம் என்று நினைப்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அதனால் இந்த பதிவில் கந்து வட்டி சட்டம் 2003 பற்றி அறிந்து கொள்வோம்.

கந்து வட்டி என்றால் என்ன.?

பணம் இருப்பவர்கள் பணம் இல்லாதவர்களுக்கு வட்டிக்காக பணம் கொடுப்பதே கந்து வட்டி என்று கூறலாம். என்ன ஒரு முக்கியமான செய்தி என்றால். கந்து வட்டியில் அதிக அளவில் வட்டி பிடிப்பார்கள்,வட்டி கட்டவில்லை எனில், அதற்கும் இன்னொரு வட்டி போட்டு வட்டி வாங்குவார்கள்.

ஒரு வேளை கொடுக்க தவறும் சமயத்தில், அதாவது வட்டி கட்ட கூட தவறும் சமயத்தில், வீட்டை தேடி வந்து அசிங்கப்படுத்தி பேசுவதும், பின்னர் மிரட்டுவதுமாக இருக்கும்.

கந்து வட்டி சட்டம் 2003:

தமிழ்நாட்டில் கடன் தொகைக்கு அதிக வட்டி வழங்குவதை தடை செய்வதற்காக 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்ப பெறுவதற்காக மக்களின் மீது நடத்தப்படும் நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிப்படைந்தார்கள். இதனை கருத்தில் கொண்டு தான் கந்து வட்டி சட்டம் கொண்டுவரப்பட்டது. அவை என்ன சட்டம் என்று அறிந்து கொள்வோம்.

இனி வண்டியில Overload ஏத்தினா 60,000 வர அபாரதமா!

வருடத்திற்கு 18%  மேல் வட்டி வசூலிப்பவர்களுக்கு, மூன்றாண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ 30,000 அபராதம் விதிக்கப்படும்.

அதீத வட்டி வசூலிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள், குற்றவியல் நீதிமன்றத்தையும் அணுகலாம்.

கடன் பெற்றவர்களின், அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வட்டிக்காரர்கள் அபகரித்திருந்தால், அதனையும் நீதிமன்றமே மீட்டுக்கொடுக்கும்.

வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை முழுநேரத் தொழிலாக நடத்துபவர்கள், தமிழ்நாடு மணி லெண்டர்ஸ் ஆக்ட் 1957’ கீழ் தாசில்தாரிடம் லைசென்ஸ் வாங்க வேண்டும்.

ஒருவருக்கோ, சிலருக்கோ பணம் கொடுத்து வட்டி வாங்குவதற்கு, லைசென்ஸ் எடுக்கவேண்டும் என்று அவசியமில்லை.

கொள்ளையடித்தால் இதுதான் தண்டனையாம்

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 

 

Advertisement